இந்தியா முக்கிய செய்திகள்

 டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

  • Feb 8, 2025 - 05:22 PM
  • 0 Comments

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கடந்த 02ம் திகதி நடைபெற்றது. தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய […]

முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்பி நிதி மோசடி செய்தாரா?

  • Feb 8, 2025 - 05:04 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றல்

  • Feb 8, 2025 - 04:54 PM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் நேற்று (07-02-2025) மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, சிறு பொதியில் இருந்த ஒரு கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர், மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருக்காக சித்தியின் நகையை திருடிய பெறாமகன் உள்ளிட்ட நால்வர் கைது

  • Feb 8, 2025 - 04:49 PM
  • 0 Comments

போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் உட்பட திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட 3 இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 03 ஆம் திகதி தங்க நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வசித்து வந்த, […]

செய்திகள் முக்கிய செய்திகள்

போட்டிப்பரீட்சையின்றி வேலை தருமாறு வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

  • Feb 8, 2025 - 04:41 PM
  • 0 Comments

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் இன்று சனிக்கிழமை (08) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு, வரவு செலவு திட்டத்தில் 35,000 வேலைவாய்ப்பினை பட்டதாரிகளுக்கு வழங்குவதை உறுதி செய், படித்து பட்டம் பெற்றும் பதவி இல்லை ,வேலை இல்லை என்றால் பல்கலைக்கழகம் எதற்கு, […]

முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை காணிக்கான மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லையென பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் திட்டவட்டம்

  • Feb 8, 2025 - 04:35 PM
  • 0 Comments

  மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை – பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் இவ்வாறு […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் தாக்குதல்

  • Feb 8, 2025 - 08:03 AM
  • 0 Comments

வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (07-02-2025 ) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவருக்கும், கீழ் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் பாடசாலை மாணவன் […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மிருகங்களைப் போலவே மனிதர்களுக்கும் இனப்பெருக்கத்திற்கான சீசன் இருக்கின்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள்

  • Feb 8, 2025 - 07:36 AM
  • 0 Comments

ஒவ்வொரு மிருகமும் கருதரிப்பதையும், பிள்ளை பெறுவதையும், பாலியலையும் சீசனை பொறுத்து தான் செய்யும். ஆண்டு முழுக்க பாலியலில் ஈடுபடுவது மனிதர்கள் தான் என ஒரு கருதுகோள் உண்டு ஆனால் அது அத்தனை சரியில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனித சமூகங்கள் கடும் கோடையிலும், கடும் குளிரிலும் பிள்ளைகள் பெற அனுமதிப்பதிப்பதில்லை. மிதமான தட்பவெப்பம் இருக்கும் இலையுதிர்காலத்தில் தான் பெரும்பாலான பிள்ளைகள் பிறக்கின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறக்கும் மாதம் செப்டெம்பர். அமெரிக்காவிலும் செப்டெம்பர் தான் அதிக எண்ணிக்கையில் […]

இந்தியா

தமிழ்நாடு திருச்சி பாலியல் வழக்கில் முதலாவது சந்தேன நபருக்கு குற்றவாளிக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

  • Feb 8, 2025 - 07:24 AM
  • 0 Comments

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது […]

உலகம் முக்கிய செய்திகள்

ஹமாஸ் அமைப்பு மேலும் 3 பணய கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது

  • Feb 8, 2025 - 07:10 AM
  • 0 Comments

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர். கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp