புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஓட்டோவின் அலங்கார பாகங்களுக்கு தண்டப்பணம் விதித்த பொலிசார் கோவமடைந்த சாரதி செய்த செயல்

  • Feb 8, 2025 - 06:48 AM
  • 0 Comments

வவுனியாவில் க்ளீன் சிறிலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று (07-02-2025) இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரித்துள்ளதுடன், அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்கியிருந்தனர். அந்தவகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் கிளீன் […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார்

  • Feb 7, 2025 - 10:50 PM
  • 0 Comments

வவுனியா புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு […]

முக்கிய செய்திகள்

மாவையண்ணன் செத்த பின்னரும் அவரை கொலை செய்யும் சீவிகே. சிவஞானம்

  • Feb 7, 2025 - 10:19 PM
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த அரசியல்குழுத் தலைவரும் மூத்த தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடத்தில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தருணத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்ட தச்சன்காடு இந்து மயானத்தில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் சார்பில் ‘மாவையின் மரணத்திற்கு காரணமான […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

  • Feb 7, 2025 - 07:38 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி என்றும், அந்தத் திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நாட்டின் மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதாக நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா (லுழாநi ளுயளயமயறய) இதன்போது தெரிவித்தார். […]

முக்கிய செய்திகள்

வளி மாசடைதல் தொடர்பில் யாழ்.மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கை அமுலில்

  • Feb 7, 2025 - 05:05 PM
  • 0 Comments

யாழ்.மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பாக சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்று அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே இருந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு அவை தற்போது மீளப் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வளி மாசுபடுதலின் தன்மைகள் குறித்து அவதானிக்கப்பட்டு அவர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்.

  • Feb 7, 2025 - 04:53 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள், ‘ அரச நியமனத்தினை உறுதிப்படுத்து’, ‘காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே’, ‘அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே’, ‘வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்’ போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் […]

முக்கிய செய்திகள்

UNHRC இலிருந்து அமெரிக்கா வெளியேறுமானால் இலங்கைக்கு அது சாதகமாம் – சட்ட நிபுணர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா

  • Feb 7, 2025 - 04:00 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இருந்து விலக அமெரிக்கா எடுத்த தீர்மானம் இலங்கைக்கு சாதகமாக அமையும் என சட்ட நிபுணர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 24 ஆ ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 58 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு இந்த மாற்றமானது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தப்படுவதிலும், மேற்கத்திய […]

முக்கிய செய்திகள்

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவை நடாத்துவதற்கான கூட்டம் இன்று நடைப்பெற்றது

  • Feb 7, 2025 - 03:45 PM
  • 0 Comments

அதன்படி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் பிரகாரம் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 4000 இலங்கை பக்தர்களையும், 4000 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள், உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 1000 நபர்களும் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிசார், ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

‘GovPay’ வசதி இன்று 16 அரச சேவைகளுக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

  • Feb 7, 2025 - 02:28 PM
  • 0 Comments

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp