செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

  • Feb 11, 2025 - 07:06 PM
  • 0 Comments

இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உத்தேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களுடைய முதலீடுகளுக்கு நேயம்மிக்க நிறுவனச் சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக சட்டரீதியான பொறிமுறையை உருவாக்குவதற்காக இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடுகளை எட்டியுள்ளனர். […]

முக்கிய செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி பலவேறு தலைவர்களை சந்திக்கின்றார்

  • Feb 11, 2025 - 07:00 PM
  • 0 Comments

இன்றைய தினம் ஜனாதிபதி ‘எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்’ என்ற தொனிப்பொருளில் டுபாயில் நடைபெறும் 2025 உலக அரச மாநாட்டின் முழுமையான அமர்வில் கலந்துகொள்வதோடு, மாநாட்டின் போது முக்கியமான சில இருதரப்பு சந்திப்புகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். அதன்படி டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடனும் பின்னர் கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவுடனும் இருதரப்பு சந்திப்புக்கள் நடைபெறவுள்ளன. அதேபோல், பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயாருடன் சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் இளைஞர் ஒருவர் 2 கிலோ கஞ்சாவுடன் கைது

  • Feb 11, 2025 - 06:36 PM
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர அவர்களின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் […]

முக்கிய செய்திகள்

காதலர் தினமான எதிர்வரும் 14 ம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.

  • Feb 11, 2025 - 06:28 PM
  • 0 Comments

பிரதமர் ஹரினி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16க்கு அமைய எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் நேற்று (10-02-2025 ) பிரசுரிக்கப்பட்ட 2423ஃ04ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அன்றைய தினம் பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார். அன்றைய தினம், உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் (விசேட […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் முறைகேடு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

  • Feb 11, 2025 - 06:20 PM
  • 0 Comments

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரால் பாடசாலை மாணவர்களின் கல்வி ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதுடன், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாகவும், பாடசாலையின் வளர்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யும் அதிபரை […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் ஜப்பானியத் தூதுவர் நேரில் பார்வையிட்டார்

  • Feb 11, 2025 - 06:11 PM
  • 0 Comments

ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (யுமழை ஐளழஅயவய) தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (யுமழை ஐளழஅயவய) தூதரக அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முகமாலைப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நிறுவவனப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளார். அந்தப் பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் இந்தப்பகுதியில் மீள் […]

முக்கிய செய்திகள்

நாளை மின்வெட்டு நடைபெறாதென இலங்கை மின்சார சபை அறிவிப்பு

  • Feb 11, 2025 - 06:04 PM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி பௌர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08-02-2025) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சாரசபை தீர்மானித்திருந்தது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (10-02-2025) […]

முக்கிய செய்திகள்

யாழ். சட்டவிரோத தையிட்டி விகாரையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

  • Feb 11, 2025 - 05:57 PM
  • 0 Comments

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை புதன்கிழமை (12) மாலை 6 மணி வரை தொடரும் என கூறப்படுகிறது. இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

  • Feb 11, 2025 - 02:35 PM
  • 0 Comments

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டது. சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவர் மாடிக்கட்டடத்தில் […]

முக்கிய செய்திகள்

துபாயில் செத்துப்போன நவ சிங்களே ஒருங்கிணைப்பாளர் கட்டுநாயக்காவில் கைது

  • Feb 11, 2025 - 09:25 AM
  • 0 Comments

டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்த நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து இலங்கை வந்தடைந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp