உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பம்

  • Jul 10, 2025 - 07:19 PM
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம நடைபெறுகினறது

  • Jul 10, 2025 - 06:04 PM
  • 0 Comments

யாழ். தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று வியாழக்கிழமை பௌர்ணமி தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறும் விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் தமிழ்த்தேசிய மக்கள முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். சமத்துவக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. […]

உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவுடன் தொடரந்து பேசி வரியை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்-வர்த்தக சம்மேளனம்

  • Jul 10, 2025 - 05:46 PM
  • 0 Comments

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க விதித்திருந்த 44% தீர்வை வரியை 30ம% ஆகக் குறைத்தமைக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வரிக் குறைப்பை மேலும் குறைப்பதற்கு அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இலங்கை வர்த்தக சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை வர்த்தக சம்மேளனம், அமெரிக்காவிற்கான ஏற்றுமதிக்கான பிராந்திய போட்டியாளர்களின் கட்டணக் கட்டமைப்பை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்த ஒரு […]

உள்ளூர் செய்திகள்

நாட்டில் முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய ஆராய்ச்சி குழு

  • Jul 10, 2025 - 05:32 PM
  • 0 Comments

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக தேசிய ஆராய்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து முன்னுரிமை அளிப்பதற்காக ஒரு புதிய தற்காலிகக் குழு ஒன்று கடந்த 07 ஆம் திகதி அமைக்கப்பட்டது. தேசிய அபிவிருத்தி இலக்குகள் மற்றும் தேசியத் தேவைகளின் அடிப்படையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருக்கோணேஸ்வரர் ஆலய காணியில் தனியார் கன்னியா அத்துமீறிய கட்டிடப் பணி உடனடி நிறுத்தம்

  • Jul 10, 2025 - 05:23 PM
  • 0 Comments

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாhரின் நேரடி ஆய்வின் பின்னர் கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணியில் தொடர்பு இல்லாத சிலருடைய அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுப்பணி மீண்டும் எதிர்வரும் 21 ம் திகதி ஆரம்பம்

  • Jul 10, 2025 - 05:09 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு

  • Jul 10, 2025 - 12:55 PM
  • 0 Comments

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவாலும், ஒரு கிலோ பால்மா பொதியின் விலை 250 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்டது வெள்ளை மாளிகை

  • Jul 10, 2025 - 12:34 PM
  • 0 Comments

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09-07) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் மச்சாளான 13 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு 19 வயது இளைஞன் கைது

  • Jul 10, 2025 - 09:46 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று (10-07) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் மச்சான் முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை […]

உள்ளூர் செய்திகள்

இலங்கை மீண்டும் கடுமையான வறுமை நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றதென புதிய ஆய்வு தெரிவித்துள்ளது

  • Jul 10, 2025 - 07:39 AM
  • 0 Comments

ஒரு நாளுக்கு 3.65 அமெரிக்க டொலருக்கு குறைவான வருமானத்தை ஈட்டும் மக்களின் விகிதம் கடந்த 2024ஆம் ஆண்டு சுமார் நான்கில் ஒரு பகுதி மக்களைப் பாதித்துள்ளது. இது 2021இல் இருந்ததைவிட இருமடங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலைமை, 2000களின் தொடக்கத்தில் இருந்த உயர்ந்த வறுமை நிலையை மீண்டும் நினைவூட்டுகின்றது. இந்த தகவல்கள், வறுமை பகுப்பாய்வு மையமான CEPA வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மீண்டும் நிலைமையை ஒரளவுக்கு சீரமைத்துள்ளதாலும், தற்போதைய நிலைமை திரும்பும் அபாயமும் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp