உள்ளூர் செய்திகள்

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை அம்போ என விட்ட சீனா

  • Jul 13, 2025 - 08:05 AM
  • 0 Comments

சீனாவின் சைனோபெக் நிறுவனம் முன்னெடுத்துள்ள அமெரிக்க டொலர் 3.7 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய முதலீட்டு முயற்சியாக இருந்தது. ஆனால் தற்போது அந்தத் திட்டம் தடுமாறும் நிலையில் உள்ளது. அதன் காரணமாக, இத்திட்டத்துக்கான முதலீட்டையும் சைனோபெக் இன்னும் மேற்கொள்ளவில்லை. இலங்கை அரசு முதலில் வெளியிட்ட டெண்டர் (tender) நிபந்தனைகளின்படி, இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தயாரிக்கப்படும் எண்ணெய்யில், 20மூ மட்டுமே உள்ளூர் சந்தையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 80% எண்ணெய் வெளியுறைக்கு […]

உள்ளூர் செய்திகள்

யாழ் நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.

  • Jul 13, 2025 - 07:50 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இருந்து டெல்ஃப் தீவிலிருந்து கரை நோக்கிச் சென்ற சுற்றுலா படகு இன்று காலை கவிழ்ந்தது. இதில் 14 பேர் பயணம் செய்திருந்தனர். அவர்களில் எவரும் உயிரிழக்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவலடி கடற்கரைக்கு அருகே நடந்துள்ளது. கடலில் அலைகள் அதிகமாக இருந்ததால் படகு சமநிலையை இழந்து கவிழ்ந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தப் பயணிகள் அனைவரும் பாதுகாப்புக் கருவிகளை அணிந்திருந்ததால் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது விபத்துக்குப்பின் அருகிலிருந்த மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் […]

உள்ளூர் செய்திகள்

இந்தியா மீதான அமெரிக்க வரியால் இலங்கைக்கும் பாதிப்பென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

  • Jul 13, 2025 - 07:33 AM
  • 0 Comments

இந்தியாவுக்கு எந்தளவு வரி அறிவிக்கப்படவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (11-07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசியாவில் இலங்கை மாத்திரமே அமெரிக்காவுடன் தீர்வை வரி தொடர்பில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான குற்றவாளிகள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?

  • Jul 13, 2025 - 06:44 AM
  • 0 Comments

பலவிதமான குற்றங்களில் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சில கைதிகள், தங்களது தண்டனை காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாமலேயே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தற்போது பெரும் கண்டனத்திற்குரியதாக மாறியுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டு 10, 15 அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைவாழ்க்கை அனுபவிக்க வேண்டிய கைதிகள் சிலர், வெறும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் கொலை, பாலியல் வன்கொடுமை, ஆயுதம் வைத்திருத்தல், கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் […]

இந்தியா முக்கிய செய்திகள்

எயார் இந்தியாவின் விமானத்தின் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் நிறுத்தம். அறிக்கை வெளியீடு

  • Jul 12, 2025 - 07:22 AM
  • 0 Comments

Air India நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த ஆண்டு சந்தித்த அதிர்ச்சி தரும் வான்விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் விமானப் பயணிகளிடையே பெரும் பதற்றத்தையும், விமான பாதுகாப்பு நடைமுறைகளில் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த விமானம் 38,000 அடி உயரத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, அதன் இரு என்ஜின்களும் (‘engine 1’ மற்றும் ‘engine 2’) ) திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. அவை 0.1 வினாடித் தாமதத்துடன் ஒரே நேரத்தில் செயலிழந்துள்ளன […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயத்தை இந்தியா உன்னிப்பாக பார்க்கின்றது

  • Jul 12, 2025 - 07:05 AM
  • 0 Comments

ஜெனரல் அசீம் முனீர் அண்மையில் இலங்கைக்கு முக்கியமான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரது வருகை சாதாரண மரியாதை விஜயமாக மட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் உள்ள பெரிய நிலைத்திறனியல் நோக்கங்களை மேற்கொண்டதாக இந்தியா பார்க்கின்றது இந்த விஜயத்தின் போது அவர் இலங்கை அரசியல் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ பயிற்சி, உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக வெளியிடப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வை இந்திய பாதுகாப்பு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பால்மா விலை அதிகரிப்பிற்கான காரணத்தை மத்திய வங்கி விளக்கியுள்ளது

  • Jul 12, 2025 - 06:49 AM
  • 0 Comments

பால்மா விலை உயர்வுக்கு முதன்மையான காரணமாக, இலங்கை அரசாங்கம் சமீபத்தில் அமெரிக்காவுடன் கொண்டிருந்த வரிச் சலுகை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காணப்படுகின்றன. அதன்படி சில இறக்குமதிச் உhயசபநள குறைக்கப்பட்டாலும், நாணயமாற்றக் குறைபாடுகள் மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரித்திருப்பதால், விலை உயர்த்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் இதற்கிடையில் மத்திய வங்கியின் ஆளுநர், பால் மா விலை அதிகரிப்பிற்கான காரணத்ததை விளக்கியுள்ளார் ‘இது மக்கள் எதிர்பார்த்தது போல் அமெரிக்காவுக்காக வழங்கப்பட்ட சலுகை அல்ல. நாட்டின் உள்நோக்கான பொருளாதார சீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் நபர் ஒருவர் மரணம் கொலையென மக்கள் விசனம். விபத்தென பொலிஸார் தெரிவிப்பு

  • Jul 12, 2025 - 06:26 AM
  • 0 Comments

நேற்றிரவு (11-07) இரவூ மணியளவில் கூமாங்குளம் மதுபாண விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிசார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாரின் இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். அடாவடியான இச்செயற்ப்பாட்டிற்கு நீதி […]

உள்ளூர் செய்திகள்

அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றுகின்றதென -அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு

  • Jul 11, 2025 - 10:38 PM
  • 0 Comments

வேலைவாய்ப்பு விடயத்தில் உள்வாரி பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளை 27ஃ2இன் கீழ் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் மேலும் உரையாற்றுகையில், 2014 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சிறப்பு சித்திகளுடன் பல்கலைக்கழகம் நுழைந்த நாங்கள் 2019 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் ஸ்திர […]

உள்ளூர் செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் வெளிப்படத்தன்மை இருக்குமென்கிறார் பிரதமர் ஹரணி

  • Jul 11, 2025 - 09:45 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லையென பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சமிந்த விஜேசிறி தனது கேள்வியில், இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp