உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்டச் செயலக கணக்காளராக திரு. வ. ரதீஸ் கடமையேற்பு..!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் கணக்காளராக திரு. வல்லவராஜன் ரதீஸ் இன்றைய தினம் (20.04.2026) காலை 09.00 மணியளவில் அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமையேற்பதற்கு முன்னராக சம்பிரதாயபூர்வமாக கணக்காளர் வரவேற்க்கப்பட்டார் என்பதுடன், அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
கணக்காளராக கடமையேற்ற திரு. வ. ரதீஸ் அவர்கள், முன்னர் யாழ்ப்பாணம் தபால் திணைக்களத்தின் – பிராந்திய கணக்கு அலுவலகத்தின் கணக்காளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp