உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டடத்தை உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர்

  • Jul 22, 2025 - 01:09 PM
  • 0 Comments

மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டடம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இப்பார்வை இடம்பெற்றது. இதற்கு முன்னதாக, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை ஆகியவற்றை புனரமைப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என மாவட்ட செயலர், உலக வங்கி குழுவினரிடம் வலியுறுத்தியிருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க, உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு இணங்க கடந்த இரண்டு மாதங்களாகவே உலக வங்கி […]

செய்திகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

  • Jul 22, 2025 - 12:50 PM
  • 0 Comments

வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 10 நாள் இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அகழ்வாய்வுத் தளத்தில் வைத்து நேற்று ( 21-07 ) ஊடகங்களிடம் தெரிவித்தார். அகழ்வில் முதலாவது ‘சைட் வன்’ புதைகுழியில் நான்கு மண்டையோட்டுத் தொகுதிகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை […]

உள்ளூர் செய்திகள்

மனித புதைகுழிகளை அகழ நிதி, நிபுணத்துவம் வழங்க வேண்டுமென இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்ததுள்ளது

  • Jul 21, 2025 - 05:29 PM
  • 0 Comments

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு, பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்களை அகழ்வதற்கான நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் போன்ற தேவையான வளங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியத்தை அரசு ஆராய வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள், ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29வது அமர்வை முன்னிட்டு சமர்ப்பிக்கப்பட்ட 25 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அமர்வு செப்டம்பர் 22 முதல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை பாவித்து வந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

  • Jul 21, 2025 - 03:09 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார். அதனையடுத்து, நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரவும் இனப்படுகொலையாளியென அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்

  • Jul 21, 2025 - 01:56 PM
  • 0 Comments

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே; அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது’ என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுவிக்கக்கூடிய தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் திடுக்கிடும் கண்டனத்துடன் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது: சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் இனப்படுகொலைக்கு சூழ்நிலை ஏற்படுத்தி, அரசியல் வாதிகள், பௌத்த துறவிகள், அடிமட்ட மக்களை ஏவி, 1983ஆம் ஆண்டு ‘கருப்பு ஜூலை’ நிகழ்வை வழிநடத்தினர். அதனைத் தொடந்து 42 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் திருவிழாவின் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கலாச்சார முறைப்ப கையளிப்பு

  • Jul 21, 2025 - 01:35 PM
  • 0 Comments

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று (21.07.2025) காலை சிறப்பாக இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் இணைந்து பந்தற்கால் நடும் நிகழ்வும் நடத்தப்பட்டதோடு, பரம்பரையாக கொடிச்சீலை வடிவமைக்கும் மரபுடையவர்களுக்கு வழங்கப்படும் காளாஞ்சி, நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு பாரம்பரிய மாட்டுவண்டி ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு, கலாச்சார மரபின்படி பத்திரிகையுடன் இணைந்து கையளிக்கப்பட்டது. இந்த ஆண்டு நல்லூர் பெருந்திருவிழா, ஜூலை 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

  • Jul 21, 2025 - 01:25 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (20), குறித்த மைதானத்தில் நடத்திய உதைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவர் மீது கோல் கம்பம் திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாவாந்துறை […]

உள்ளூர் செய்திகள்

திருகோணமலையில் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு

  • Jul 21, 2025 - 01:09 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புக் காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்தார். 2024ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (19-07) சீனக்குடா துறைமுக அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை துறைமுக […]

உள்ளூர் செய்திகள்

யாழ். சுன்னாகம் புடவையகத்தில் தீ விபத்து கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசம்

  • Jul 21, 2025 - 12:36 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள ஒரு புடவையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) ஏற்பட்ட தீ விபத்தில், 1 கோடி 25 இலட்சம் பெறுமதியான பொருட்கள் முழுமையாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றி மேலும் தெரியவருவதாவது வியாபாரம் முடிவடைந்தபின் புடவையக பணியாளரொருவர் கடையை பூட்டி வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில் இருந்து தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அந்த தீ வேகமாக பரவியதன் விளைவாக கடை முழுவதும் தீக்கிரையாகியுள்ளது. இது தொடர்பாக சுன்னாகம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐநாவின் செயற்பாடுகள் அநுர அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துள்ளது- கஜேந்திரகுமார்

  • Jul 21, 2025 - 12:26 PM
  • 0 Comments

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து, சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு வடிவமைப்பு கொடுப்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாகும் என அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20-07) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கூறியதாவது: தமிழின படுகொலைக்கு பொறுப்பு கூறும் நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp