எல்டிடி முன்னாள் உறுப்பினருக்கு கனடிய குடியுரிமைக்காக ஆதரவு வழங்கியதாக கனடா பாதுகாப்பு அமைச்சர் அனந்தசங்கரி மீது குற்றச்சாட்டு
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஈழத் தமிழரான கேரி அனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கனடிய குடியுரிமை வழங்க வலியுறுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் பேரில், செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனடிய குடியுரிமை வழங்குமாறு 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் முகமையிடம் அனந்தசங்கரி இரு கடிதங்களை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்களில், செல்வகுமார் கனடிய நாட்டில் பிறந்த குழந்தையின் தந்தையாவார் என்பதையும், குடும்ப பிரிவினைத் தவிர்க்கும் […]









