உள்ளூர் செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றி தெரிந்தும் நடவடிக்கைஎடுக்காத நிலந்த ஜெயவர்தன பணி நீக்கம்

  • Jul 20, 2025 - 01:05 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறை தலைவர் நிலந்த ஜெயவர்தன், பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்மானம் பொலிஸ் ஆணைக்குழுவில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரை பணிநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிக்கும் வகையில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு தேவையான பணிப்புரை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, நிலந்த ஜெயவர்தன் தனது கடமைகளை புறக்கணித்ததாகவும், குற்றவியல் […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பு கண்டி ஜனாதிபதி மாளிகைகள் தவிர ஏனையவை மக்கள் நலனுக்கே பயன்படுமென்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

  • Jul 20, 2025 - 12:51 PM
  • 0 Comments

நாட்டின் அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் (கொளும்பு மற்றும் கண்டி மாளிகைகள் தவிர) மக்களின் நலனுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் முன்வைக்கப்படும். தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் […]

உலகம் முக்கிய செய்திகள்

பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு

  • Jul 19, 2025 - 05:04 PM
  • 0 Comments

காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் பட்டினியில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் (றுகுP) தெரிவித்துள்ளது, மேலும் அந்த பகுதியில் உள்ள மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி சுவைதா மாகாணத்தில் ‘உடனடி போர்நிறுத்தத்தை’ அறிவிக்கிறார். காசாவில் தடுத்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ‘லிட்டில் ஸ்ரீலங்கா’வில் உள்ள 40 தமிழ் வர்ததகர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

  • Jul 19, 2025 - 04:29 PM
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரமான சூரிச்சில் ‘லிட்டில் ஸ்ரீலங்கா’ என அழைக்கப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, சூரிச் மாவட்டம் ஐது பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடத்திலிருந்து இவர்களை 2026 ஆம் ஆண்டுக்குள் வெளியேறுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட பல தமிழ் வியாபார நிறுவனங்கள் இதன் மூலம் பாதிக்கப்படவுள்ளன. புதிய தொழிநுட்ப வசதிகளுடன் கட்டிடத்தொகுதி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் வெளிநடப்பு

  • Jul 19, 2025 - 04:12 PM
  • 0 Comments

இன்று முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், விருந்தினர்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டதையடுத்து, சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில், பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளருக்கு எந்தவிதமான முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. இதனைக் கண்ட தவிசாளர் ஜசீதன் மற்றும் பிரதேச […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்துள்ளார்

  • Jul 19, 2025 - 03:54 PM
  • 0 Comments

இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் பாடகி கெனீஸா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார். திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கையின் திரைப்பட சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து முற்றிலுமாக தீக்கிரை ஒருவர் காயம்

  • Jul 19, 2025 - 03:17 PM
  • 0 Comments

இந்த சம்பவம் முசைலயவ ஆயடயமா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18-07) காலை இடம்பெற்றது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். விபத்து நேரத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர். தீ பரவிய வேளையில், பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், பயணிகள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. விபத்துடன் தொடர்புடைய நிறுவனம் செயற்பாடுகளை […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் பாடசாலை மாணவிகள் கர்ப்பம் தரிப்பது அதிகமாகின்றது- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

  • Jul 19, 2025 - 03:01 PM
  • 0 Comments

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (18-07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் மற்றும் அவர்கள் தாய்மாராகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து இளம்பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வை வழங்கும் […]

உள்ளூர் செய்திகள்

திருகோணமலை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திகளில் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்- குகதாசன் எம்.பி

  • Jul 19, 2025 - 02:43 PM
  • 0 Comments

திருகோணமலை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திகளில் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கில் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வலியுறுத்தினார். 4ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலை சுற்றுவட்டச் சந்தி, மரத்தடிச் சந்தி, பொதுப்பேருந்து நிலையச் சந்தி, மாநகர சபை சுற்றுவட்டச் சந்தி, துறைமுக பொலிஸ் நிலையச் சந்தி ஆகியவற்றில் சமிக்ஞை விளக்குகள் அவசியம் பொருத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பான பிரேரணைகள் […]

உள்ளூர் செய்திகள்

வவுனியாவில் ஒருவரின் மரணத்தையடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பில் மேலும் 5 பேர் கைது

  • Jul 19, 2025 - 02:24 PM
  • 0 Comments

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில், மேலும் ஐந்து பேர் நேற்று (18-07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். அன்றைய இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் விழுந்து உயிரிழந்த நிலையில், அந்த மரணத்திற்கு பொலிசார் காரணம் எனக் கூறிய குழுவினர் குழப்பத்தை ஏற்படுத்தி, பொலிசாரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைக்காக அங்கு சென்ற பொலிசாரை அப்பகுதியிலிருந்த மக்கள் தாக்கியதுடன், அந்த சம்பவத்தில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp