உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வேலணையில் ஆட்டைத் திருடி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிப்பு..!

two arrested by villagers for stealing a goat in velanai and transporting it in a three wheeler | Pathivu News

யாழ்ப்பாணத்தில் ஆட்டினை திருடி , முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்து , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் வளர்ப்பு ஆடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக , ஆட்டின் உரிமையாளர் தேடி வந்துள்ளார்.

அந்நிலையில் , இரவு நேரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியினை ஊரவர்கள் தடுத்து நிறுத்திய வேளை , காணாமல் போன ஆடு முச்சக்கர வண்டிக்குள் காணப்பட்டுள்ளது

அதனை அடுத்து முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , மதியமே ஆட்டினை திருடி பற்றைக்காடு ஒன்றில் மறைவாக கட்டி வைத்திருந்ததாகவும் , அதனை தாம் தற்போது அங்கிருந்து கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்

அதனை தொடர்ந்து , ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் , இரு இளைஞர்களையும் , அவர்களால் திருடப்பட்ட ஆட்டினையும் , அதனை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியினையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊