துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில், நேற்றைய தினம் (01.11.2026) ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.
துயிலும் இல்ல வளாகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதால், கடந்த ஆண்டுகளைப் போன்று இம்முறையும் அருகிலுள்ள காணியில் நவம்பர் 27 ஆம் திகதி நினைவேந்தல் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1452921390384715
What’s your Reaction?

