உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் கிணற்றில் வீசப்பட்ட வாள்; இளைஞனையே கிணற்றினுள் இறக்கி மீட்ட பொலிஸார்..!

sword thrown into well upon seeing police officers send youth into well to retrieve it | Pathivu News
யாழ்ப்பாணத்தில் பொலிசாரை கண்டதும் உடைமையில் இருந்த வாளினை இளைஞன் கிணற்றினுள் வீசியுள்ளான். குறித்த இளைஞனை கிணற்றினுள் இறக்கி வாளினை பொலிஸார் மீட்டுள்ளனர்
அனலைதீவு பகுதியில் , வீடொன்றில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர்
பொலிசாரை கண்டதும் , இளைஞன் வீட்டில் இருந்த வாள் ஒன்றினை தனது வீட்டு கிணற்றினுள் வீசியுள்ளார். அதனை அவதானித்த பொலிஸார் வாளினை வீசிய இளைஞனை பிடித்து , அவரையே கிணற்றினுள் இறக்கி அந்த வாளினை மீட்டுள்ளனர்
அத்துடன் வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டில் இருந்தும் வாள் ஒன்றினையும் இரண்டு முகமூடிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்
அதனை தொடர்ந்து கைது செய்த இளைஞனையும் , மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் இரண்டு முகமூடிகளையும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊