rain expected in many parts of sri lanka after 2 pm today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் பல பகுதிகளுக்கு மழை..!

  • Sep 29, 2026 - 09:44 AM
  • 0 Comments

ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், சில இடங்களில் 50 மி.மீ. க்கு மேல் கணிசமான கனமழையும் பதிவாகும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று காலை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய […]

removal of thiyaga deepam statue an attack on the right to remember | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தியாக தீபத்தின் சிலை அகற்றம் – நினைவுகூரும் உரிமையின் மீதான தாக்குதலா..?

  • Sep 29, 2026 - 09:41 AM
  • 0 Comments

மயூரப்பிரியன். “சிலைகள் உடைந்தாலும் தியாகங்கள் உடைவதில்லை” என்பதற்கேற்ப, தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆழந்த வேதனையையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. உணவின்றியும் நீரின்றியும் 12 நாட்கள் போராடி தன் உயிரை அர்ப்பணித்த ஒரு தியாகியின் நினைவிடத்தையும் சிலையையும் அகற்றுவது, வரலாற்று அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது. தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் நீங்காத இடம் பிடித்த தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வானது, வெறும் ஒரு கட்டமைப்பை தகர்த்தெறிந்த […]

jaffna district mega job fair | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்டத்தில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு..!

  • Sep 29, 2026 - 09:38 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமை அன்று (03.10.2026) காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவித்தார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2236962300415877

ampara district wins medal after 12 years police sergeant vijitha makes history | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

12 ஆண்டுகளுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு பதக்கம்; திருக்கோவில் பொலிஸ் சார்ஜன்ட் விஜிதா சாதனை..!

  • Sep 28, 2026 - 12:55 PM
  • 0 Comments

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 85ஆவது வருடாந்த பொலிஸ் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் கிருஷ்ணமூர்த்தி விஜிதா 2 கிலோமீற்றர் வேக நடைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று அம்பாறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் நாடளாவிய ரீதியில் 38 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், பொலிஸ் சார்ஜன்ட் கிருஷ்ணமூர்த்தி விஜிதா சிறப்பாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இப்போட்டியில் முதலிடம் பெற்றயு.வி. கல்ஹாரி மதிரிக்கா வீராங்கனை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் […]

dengue cases surpass 100000 in sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஒரு லட்சத்தைக் கடந்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

  • Sep 28, 2026 - 12:50 PM
  • 0 Comments

இலங்கையில் இந்த வருடத்தில் இன்று (28.09.2026) வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார். ‘அத தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விசேட வைத்தியர் இதனை வெளிப்படுத்தினார். அதேநேரம், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி தென்பட்டபோதிலும், அபாயம் முழுமையாக நீங்கவில்லை என்றும் அவர் […]

priest killed in jaffna accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்..!

  • Sep 28, 2026 - 11:53 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர் , வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் வீதிக்கு ஏறிய இளைஞனுடன் மோதுண்டு , வீதியில் விழுந்த வேளை , பின்னால் வந்த வாகனம் பூசகரை மோதியதில் , அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , நெல்லியடி பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

tamil speaking peoples political council urges saudi arabia to grant royal pardon to sivarasa anojan | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிவராச அனோஜனுக்கு அரச மன்னிப்பு கோரி சவுதி அரேபியாவிற்கு ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை’ வேண்டுகோள்..!

  • Sep 28, 2026 - 11:45 AM
  • 0 Comments

கொழும்பு, 28 செப்டம்பர் 2026: ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை’, சவுதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவரச அனோஜனுக்கு அரச மன்னிப்பு கோருவதில் அவசர மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவியை வழங்குமாறு சவுதி அரேபிய இராச்சியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் தேசிய மற்றும் சமூக ஊடகச் செய்திகள் மற்றும் பிற மூலங்கள் மூலம் அறியப்பட்ட தகவல்களின்படி, அனோஜனின் மேன்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரது […]

protest held in toronto canada | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

TORRONTO-CANADA வில் கண்டனப்போராட்டம்..!

  • Sep 28, 2026 - 11:43 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நல்லூர்பகுதியில் தியாகதீபம் திலீபன் அவர்களின் உருவச்சிலை பொலிசாரால் அகற்றப்பட்டமையை கண்டித்து காலம் :-28.09.2026(திங்கட்கிழமை) நேரம்:-பிற்பகல் 2.00மணி இடம்:-இலங்கை துணைத்தூதரகம் முன்பாக காலத்தின் கடமையை உணர்ந்து அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள். கனடியத்தமிழர் சமூகம் மற்றும் மாணவர் சமூகத்தினர்.

itak warned of exposing the alliance over statue removal accusations | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிலை அகற்றப்பட்ட விடயத்தில் தமிழரசு மீது சேறு பூசினால் முன்னணியை அம்பலப்படுத்துவோம்..!

  • Sep 28, 2026 - 11:00 AM
  • 0 Comments

தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்ட விடயத்தில் தமிழரசு கட்சியின் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்நது சேறு பூசல்களில் ஈடுபட்டால் அவர்களின் இரட்டை வேடங்களை அம்பலப்படுத்துவோம் என யாழ். மாநகர சபை முதல்வர் வி.மதிவதனி எச்சரித்துள்ளார். நல்லூர் நினைவாலயத்தில் இருந்த தியாக தீபத்தின் சிலை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் பெயர்த்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு , தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் மற்றும் மாநகர சபை முதல்வர் உள்ளிட்டோரும் காரணம் […]

vijitha herath to address un general assembly today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள அமைச்சர் விஜித..!

  • Sep 28, 2026 - 10:49 AM
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28.09.2026) ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 81ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். இன்றைய தினம் அமைச்சர் நாட்டின் தேசிய உரையை நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் கருப்பொருளான “நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமை செய்தல், அனைவருக்கும் பலனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை” என்ற கருப்பொருளுக்கு அமைய அமைச்சர் தனது உரையை நிகழ்த்துவார் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுச்சபைக் கூட்டத் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊