no plan to repeal pta says government | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நோக்கம் அரசிற்கு இல்லை..!

  • Jun 23, 2026 - 12:32 PM
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதற்குத் தேவைப்படின், தான் அறிமுகப்படுத்திய புதிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். நேற்று (22) இரவு டிவி தெரணவில் ஒளிபரப்பான ‘360’ நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாங்கள் கொண்டு வந்தோம். அதை பாராளுமன்றத்தில் […]

2026 housing project progress review meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

2026 ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்..!

  • Jun 23, 2026 - 12:29 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று (23.06.2026) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஜயசுந்தர அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார். வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் 2009ஆம் ஆண்டுக்கு […]

long queues in jaffna heat | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!

  • Jun 23, 2026 - 11:27 AM
  • 0 Comments

இம் மாதம்-30 ஆம் திகதிக்குப் பின்னர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இன்றைய தினமும் (23.06.2026) சற்றுமுன் நீண்ட வரிசையை அவதானிக்க முடிகிறது. காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/819508494429231

special crime investigation officer arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது..!

  • Jun 23, 2026 - 11:10 AM
  • 0 Comments

களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றவியல் விசாரணை பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் தொடர்பாக விசேட குற்றவியல் விசாரணை பிரிவினர் விசாரணையொன்றை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணைக்கு அமைவாக, நீதிமன்றத்தில் […]

jaffna army farm on private land | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் மக்களின் காணிக்குள் இராணுவத்தினரின் பாரிய விவசாய பண்ணை..!

  • Jun 23, 2026 - 10:56 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கில் இருந்து சுமார் 36 வருடங்களுக்கு மேலாக தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில்,, தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், குரும்பசிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியை […]

retired principal killed in tragic accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கோர விபத்து ; ஓய்வுபெற்ற அதிபர் பரிதாபமாக பலி..!

  • Jun 23, 2026 - 10:33 AM
  • 0 Comments

கிளிநொச்சி, ஏ – 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாதசாரி கடவையில் அவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், அதிவேகமாக வந்த மோட்டார் […]

early morning robbery with guards bound | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை பாதுகாவலர்களைக் கட்டிவைத்து கொள்ளை..!

  • Jun 23, 2026 - 10:28 AM
  • 0 Comments

மூன்று நபர்கள் மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பெருமளவிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர். இன்று (23.06.2026) அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்துள்ள இக்குழுவினர், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துவிட்டு, வங்கியின் பின்புறம் உள்ள குளியலறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. […]

canada shooting kills three | Pathivu News உலகம் புதியவை முக்கிய செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!

  • Jun 23, 2026 - 10:14 AM
  • 0 Comments

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர் அடங்குவர். சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என மாண்ட்ரீல் காவல்துறைத் தலைவர் ஃபாடி டகர் தெரிவித்தார். கோட்-டெஸ்-நெய்ஜஸில் பகுதியில் நண்பகல் இந்தத் துப்பாக்கிச் சூடு தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே துப்பாக்கி ஒன்று நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த சாட்சி ஒருவர், துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். […]

housing project for jaffna soldier | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் வீட்டுத்திட்டம்..!

  • Jun 23, 2026 - 10:10 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடொன்று அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றைய தினம்(23.06.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம்.எம் ராஜா எனும் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரின் “சேவா வனிதா” திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் கட்டப்படும் இந்த வீடானது , எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி கட்டி முடித்து கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டுக்கான அடிக்கல்லினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் […]

responsible use of loudspeakers at worship places | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வழிபாட்டு தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப்பொறுப்புடன் செயற்பட வேண்டும்..!

  • Jun 23, 2026 - 10:02 AM
  • 0 Comments

மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில் , யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்களின் ஊடான அதீத ஒலி எழுப்பல் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்வோர் கற்றல் செயற்பாடுகளில் பாரிய இடர்பாடுகளை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊