akkaraipattu east weed control awareness | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களைநெல் கட்டுப்பாடு குறித்து அக்கரைப்பற்று கிழக்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு.

  • Jun 25, 2026 - 03:46 PM
  • 0 Comments

நாடு முழுவதும் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களைநெல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு இன்று (25) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ. பெரோஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் களைநெல் முகாமைத்துவம், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், வயல் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியம் மற்றும் களைநெல்லை பாதுகாப்பான முறையில் அகற்றி எரித்து அழிக்கும் நடைமுறைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு […]

sri lanka today weather | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Jun 25, 2026 - 09:52 AM
  • 0 Comments

இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (ஜூன் 25) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் […]

batticaloa water shortage | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீர் விநியோக தடை! மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்பு! நீர் தேவைகளுக்கு மக்கள் மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்! -செ.நிலாந்தன் தெரிவிப்பு!

  • Jun 24, 2026 - 04:35 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் ஏற்பட்ட நீர் குழாய் உடைப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகத் தடையால் ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது அன்றாட நீர் தேவைகளுக்காக வேறுமனே தேசிய நீர்வழங்கல் வடிவமைப்பு சபையை மட்டும் நம்பியிருக்காது மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் ஏற்பட்ட […]

german deputy consul visit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் தாந்தாமலை விஜயம்…

  • Jun 24, 2026 - 04:29 PM
  • 0 Comments

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பை ஏற்று ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் சாரா ஹசல்பர்த் இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கான விஜயத்தினையும் முன்னெடுத்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் தொல்பொருள் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தெரிவித்திருந்தார். மேலும் விசேடமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தினையும் தொல்பொருள் […]

kilinochchi hospital support | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்..!

  • Jun 24, 2026 - 10:11 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் பல்வேறு துறைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அத்தகைய […]

canadian woman arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கனடா நாட்டு யுவதி 36 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது..!

  • Jun 24, 2026 - 09:41 AM
  • 0 Comments

352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனடா நாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

24hr water cut | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று குறித்த பிரதேசங்களில் 24 மணித்தியால நீர்வெட்டு..!

  • Jun 24, 2026 - 09:37 AM
  • 0 Comments

பாதுக்க, ஹோமாகம, கொட்டாவை, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளுக்கு இன்று (24.06.2026) 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை (25.06.2026) இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, மஹரகம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

teldeniya murder arrest | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

யாழில் கைதுசெய்யப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவ சந்தேக நபர்கள்..!

  • Jun 24, 2026 - 09:33 AM
  • 0 Comments

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23.06.2026) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து இன்று […]

sri lanka weather today 4 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Jun 24, 2026 - 09:28 AM
  • 0 Comments

24.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் […]

parliament chaos sitting postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்றில் அமைதியின்மை – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..!

  • Jun 23, 2026 - 12:40 PM
  • 0 Comments

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினர். அதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுந்தரப்பிடம் வினவியபோது, அதற்கு இணங்க முடியாது எனவும், தேவையெனில் குறித்த விடயம் தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு இணங்குவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதனை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊