sri lanka weather | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Jul 8, 2026 - 09:31 AM
  • 0 Comments

08.07.2026 மேல் மற்றும சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் […]

argentina quarterfinals | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

அர்ஜென்டினா காலிறுதிக்குத் தகுதி..!

  • Jul 8, 2026 - 09:28 AM
  • 0 Comments

2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் சுற்று 16இல் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் 15ஆவது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் எகிப்து அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுத்ததுடன், 67ஆவது நிமிடத்தில் மொஸ்தாபா சிகோ இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டார். எவ்வாறாயினும், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி 83ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்று அணியை மீண்டும் போட்டிக்குள் […]

government duty protect prisoners | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை..! ஐ.நா வலியுறுத்தல்

  • Jul 8, 2026 - 09:24 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே பிராஞ்ச் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. சிறை அதிகாரிகள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்வதில் சவாலான மற்றும் கடினமான கடமைகளை மேற்கொள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, அவர்களின் இழப்பு ஆழமாக உணரப்படுவதாகவும் […]

hrc probe negombo prison riot | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்;விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு..!

  • Jul 7, 2026 - 11:15 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதற்கமைய, அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் […]

justice minister visits injured officers | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் காயமடைந்த அதிகாரிகளை வைத்தியசாலையில் பார்வையிட்ட நீதி அமைச்சர்..!

  • Jul 7, 2026 - 11:11 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறைச்சாலையினுள் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று பார்வையிட்டார் வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைப் […]

indian communist leader jaffna visit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்..!

  • Jul 7, 2026 - 10:59 AM
  • 0 Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி. ராஜா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுடன் இணைந்து வடபகுதி கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 83-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்காக இலங்கை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களில் பங்கேற்றார். அதனொரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று வடக்கு மாகாண […]

seu course completion | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிரக் கற்கைநெறி நிறைவு: மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்..!

  • Jul 7, 2026 - 10:55 AM
  • 0 Comments

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிரக் கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (06) தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தீவிரக் கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எச். றிபாஸ் வரவேற்புரையாற்றியதுடன், பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தலைமையுரையாற்றினார். மாணவர்களின் ஆளுமை, தலைமைத்துவம், சமூகப் பொறுப்புணர்வு, மொழித்திறன் மற்றும் டிஜிட்டல் அறிவாற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என அவர் தெரிவித்தார். பல்கலைக்கழகக் […]

kerosene bus fine | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு ரூபா. 360,000 அபராதம்..!

  • Jul 7, 2026 - 10:49 AM
  • 0 Comments

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06.07.2026) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனை நடவடிக்கையில் சிக்கிய மூவருக்கும் தலா 120,000 ரூபா வீதம், மொத்தம் 3,60,000 (மூன்று இலட்சத்து அறுபதாயிரம்) ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் […]

human rights leadership summit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு..!

  • Jul 7, 2026 - 10:46 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. மனித உரிமைகள் அபிவிருத்திக்கான சர்வதேசக் குரல் மற்றும் மனித உரிமைகள் அபிவிருத்தியில் முனைவர் பட்டம் வரை தொழில்முறைக் கல்வியை வழங்கும் சர்வதேசத் தூதரக நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இம் மாநாடு நடைபெற்றது. இம் மாநாடு எதிர்காலத்தில் மனித உரிமைகளை வலுவூட்டுவது குறித்த ஒரு கலந்துரையாடலை கட்டமைக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த மாநாட்டு நிகழ்வில் ஏ.எச்.சி குழுமத்தின் தலைவரும் சமாதான தூதுவருமான கலாநிதி […]

jaffna family health day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் போதனாவில் இடம்பெற்ற குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம்..!

  • Jul 7, 2026 - 10:38 AM
  • 0 Comments

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(06.07.2026) சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் சுமார் 5,000 சுகப்பிரசவங்கள் நடைபெறுகின்றன. இச்சுகப்பிரசவங்கள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் (PHM) முக்கியமான மற்றும் மறுக்க முடியாத பங்காற்றுகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் தொழில்முறை சேவையும் பாராட்டி கௌரவிக்கும் நோக்கில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊