tougher law on tobacco sales with betel | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வெற்றிலையுடன் புகையிலை விற்போருக்கு எதிராக சட்டம் கடுமையாகிறது..!

  • Jul 17, 2026 - 05:02 PM
  • 0 Comments

வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது அட்டவணையின்படி, […]

rosy senanayake summoned to presidential commission | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட ரோசி சேனாநாயக்க..!

  • Jul 17, 2026 - 04:59 PM
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க இன்று (17) முற்பகல் ஆஜராகியுள்ளார். தனது மேயர் பதவிக் காலத்தின் போது, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில், அரச நிறுவனமான சதொச ஊடாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் தேவையுடைய மக்களுக்குமான உணவு வவுச்சர்களை வழங்கும் வேலைத்திட்டம் குறித்து விசாரிப்பதற்காகவே தாம் அழைக்கப்பட்டிருந்ததாக […]

manarchenai massacre 40th anniversary | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்..!

  • Jul 17, 2026 - 04:57 PM
  • 0 Comments

மூதூர் – மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. மூதூர் – மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலை குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஒருநிமிட மௌன பிரார்த்தனை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 1986.07.16 அன்று கிராமத்திற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் […]

myliddy commando bungalow protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மயிலிட்டி “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டம்..!

  • Jul 17, 2026 - 04:24 PM
  • 0 Comments

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு […]

former police chief cd wickramaratne dies by suicide | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு தற்கொலை..!

  • Jul 17, 2026 - 09:55 AM
  • 0 Comments

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் […]

rohit sharma international retirement rumors | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ரோகித் சர்மா..?

  • Jul 17, 2026 - 09:51 AM
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பேர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், […]

14kg cannabis seized in azhiyavalai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆழியவளையில் 14.280 கிலோ கிராம் கஞ்சா மீட்பு..!

  • Jul 17, 2026 - 09:48 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழிய வளைப்பகுதியில் பாளடைந்த கட்டிடம் ஒன்றுக்கிலிருந்து 14. 280 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ஆழியவழைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதி காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா பொதிகளை கைப்பற்றி […]

special meeting with local council members | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல்..!

  • Jul 17, 2026 - 09:44 AM
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ நேற்றைய தினம் நடைபெற்றது. ​இந்தக் கலந்துரையாடலின் போது வட்டார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், தற்போதைய அபிவிருத்திப் பணிகளின் அடைவு மட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.” ​அத்துடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. ​இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற […]

athurugiriya major accident traffic disrupted | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அத்துருகிரியவில் கோர விபத்து; போக்குவரத்துக்கும் பாதிப்பு..!

  • Jul 17, 2026 - 09:38 AM
  • 0 Comments

அத்துருகிரிய பகுதியில் பஸ் ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதி இன்று (17.07.2026) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக கோவின்ன வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

us tightens visa restrictions | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விசா கட்டுப்பாடுகளை இறுக்கியது அமெரிக்கா..!

  • Jul 17, 2026 - 09:35 AM
  • 0 Comments

அமெரிக்கா தமது விசா கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டு மாணவர்கள், கலாசார பரிமாற்ற விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசாக்களின் கால எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நேற்று (16.07.2026) நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த புதிய விதியானது, சர்வதேச மாணவர்களுக்கான ‘F’ விசாக்கள், கலாசார பரிமாற்றத் திட்டங்களில் வருகை தருவோர் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் ‘J’ விசாக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ‘I’ விசாக்கள் ஆகியவற்றிற்கு ஒரு நிலையான காலப்பகுதியை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊