fishermen rescued | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கடலில் காணாமல்போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு..!

  • May 4, 2026 - 03:02 PM
  • 0 Comments

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (04.05.2026) மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (02.05.2026) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர். எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில், அந்த பகுதி மீனவர்கள் தேடுதல் பணியினை முன்னெடுத்தனர். எனினும் அந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை என்பதுடன் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டாம் நாளாக இன்றும் தேடுதல் […]

neelakam protest support | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

“நீலகாமம்” போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவு: சிறீதரன் எம்.பி. உறுதி..!

  • May 4, 2026 - 02:52 PM
  • 0 Comments

​“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு எமது முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ​நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ​”மலையகம் நீலகாமம் தோட்டத்தில் அட்டூழியக் […]

vattukkottai 50 meeting | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடல்..!

  • May 4, 2026 - 02:43 PM
  • 0 Comments

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடலில் தங்களை அன்புடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஒருங்கிணைப்பாளர் : தவத்திரு வேலன் சுவாமிகள் தேதி : 06.05.2026 புதன்கிழமை நேரம் : காலை 10 மணி இடம் : முல்லைத்தீவு ஊடக அமைய கட்டிடம், PWD வீதி, முல்லைத்தீவு. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். […]

pannai beach cleanup | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பண்ணை கடற்கரையில் சிரமதானம்..!

  • May 4, 2026 - 12:10 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பண்ணை தொடக்கம் மண்டைதீவு சந்தி வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி தன்னார்வலர்களினால் சிரமதானம் மூலம் நேற்றைய தினம்(04.05.2026) ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யபப்ட்டது. அதன் போது, கடற்கரைகளில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டன

kamban festival award | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு கம்பன் விழாவில் விருது..!

  • May 4, 2026 - 10:09 AM
  • 0 Comments

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார். நேற்று (03.05.2026) பிற்பகல் கம்பன் விழாவானது வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது. சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் […]

kandy shooting | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கண்டி கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு..!

  • May 4, 2026 - 10:00 AM
  • 0 Comments

கண்டி – கடுகஸ்தோட்டை – குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

sl weather today 8 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 4, 2026 - 09:35 AM
  • 0 Comments

04.05.2026 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் […]

sellappa tribute eelam | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழ விடுதலைக்காகத் தன் குரலால் போராடியவர் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா..!

  • May 3, 2026 - 11:16 AM
  • 0 Comments

ஜனநாயகப் போராளிகள் கட்சி என்.நகுலேஸ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் நாம் ஆயுதம் கொண்டு போராடுகையின் தன் குரலை ஆயுதமாகக் கொண்டு போராடியவர் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா. இவரின் இழப்பு தமிழ்த் தேசியத்தின் பேரிழப்பாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார். தேனிசை செல்லப்பாவின் மறைவையொட்டி நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற புகழ் வணக்க நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தன் குரலால் எம் இனத்தின் […]

sittandi sports festival | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிராமிய விளையாட்டு விழா..!

  • May 3, 2026 - 11:03 AM
  • 0 Comments

மட்டக்களப்பு, சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் கிராமிய விளையாட்டு விழா இன்றைய தினம் (03.05.2026) ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த ​நிகழ்வின் ​ஆரம்பத்தில் அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டு தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் இடம்பெற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அடுத்து ஆசியுரை, வரவேற்புரை மற்றும் தலைமையுரைகளைத் தொடர்ந்து ​தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலாசார விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதன் போது […]

diagama temple kumbabishekam | Pathivu News உள்ளூர் செய்திகள் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

டயகம மேற்கு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்..!

  • May 1, 2026 - 01:42 PM
  • 0 Comments

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள டயகம மேற்கு 03-ஆம் பிரிவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம்(29.04.2026) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.01 மணி முதல் 10.10 மணி வரையிலான சுப வேளையில், மங்கல இசை முழங்க, பக்தர்கள் “அரோகரா” கோஷமிட மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக யாக பூஜை மற்றும் கும்ப பூஜைகள் இடம்பெற்றன. முதலில் வழிப்பிள்ளையாருக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து புனித கும்பங்கள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊