sri lanka weather today 6 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 29, 2026 - 12:42 PM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (29.06.2026) விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய […]

human graves ariyalai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரியாலையில் 26 மனித புதைகுழிகள் உள்ளன; கண்கண்ட சாட்சியங்களும் உயிருடன் உள்ளனர்..!

  • Jun 29, 2026 - 12:35 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சித்திரவதை முகாம்களில் இருந்து உயிருடன் தப்பியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட சித்திரைவதைகள் தொடர்பிலும் ,மற்றையவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை கண்களால் கண்ட நேரடி சாட்சியங்களாக இன்றும் வாழ்கின்றார். அவர்கள் உள்நாட்டு பொறிமுறைகளை நம்பி சாட்சி சொல்வதற்கு தயார் இல்லை. சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் , சாட்சியம் அளிக்க தயாராக உள்ளனர் என செம்மணி மனித புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார். அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்ச கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, நேற்றைய […]

fake honey arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் போலி தேன் மற்றும் தேன் வதைகளுடன் ஒருவர் கைது..!

  • Jun 29, 2026 - 10:08 AM
  • 0 Comments

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: வீடு ஒன்றில் இருந்து 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றர் சீனிப் பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சுரேந்திரன் அவர்களின் […]

poson day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும்..!

  • Jun 29, 2026 - 10:03 AM
  • 0 Comments

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும் (29.06.2026). மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்து இன்றைய போன்றதொரு பௌர்ணமி தினத்திலாகும் என்பதுடன், அன்றிலிருந்து இந்த நாட்டில் பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டது. அநுராதபுரம் மிஹிந்தலை குன்றுக்கு வருகை தந்த மிஹிந்த தேரர், அப்போது இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பியதிஸ்ஸ மன்னன் உள்ளிட்ட குழுவினருக்கு பௌத்த மதம் போதிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் இலங்கையில் பௌத்த தர்மத்தை ஸ்தாபித்ததை அடுத்து […]

sri lanka innings loss | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

மேற்கிந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை இனிங்ஸ் தோல்வி..!

  • Jun 29, 2026 - 09:59 AM
  • 0 Comments

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இனிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. போட்டியின் நான்காம் நாளான (28) ​​நேற்று தமது இரண்டாம் இனிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இனிங்ஸ் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி அதன் முதலாம் இனிங்ஸில் […]

unite for nation | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

நாகரீகமான நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்..!

  • Jun 29, 2026 - 09:56 AM
  • 0 Comments

பௌத்த மதத்துடன் கிடைத்த, நாகரீகமான சமூகத்தின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒரு நாகரீகமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் பலமாக ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி, பெருமைமிக்க ஒரு நாகரிகத்திற்கு பாதை அமைத்த உயரிய பௌத்த தர்மம் இந்நாட்டிற்கு கிடைத்தது இன்று போன்றதொரு பொசன் பௌர்ணமி தினத்திலேயாகும். தேரவாத பௌத்த தத்துவத்தினதும் […]

hajj pilgrimage allegations rejected | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது..!

  • Jun 26, 2026 - 12:03 PM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பான ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தை விடவும் இம்முறை முடிந்தளவில் சிரமங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கூறினார். அதேநேரம், ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு […]

kishore removal chavakachcheri protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிசோரின் பதவி பறிப்பை கண்டித்து சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்..!

  • Jun 26, 2026 - 11:59 AM
  • 0 Comments

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் , சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர் , உப தவிசாளரின் பதவியை நீக்கியும் , நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் […]

two bus accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து..!

  • Jun 26, 2026 - 11:54 AM
  • 0 Comments

மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து மாத்தறை – தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊