vehicle parts thief arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வாகனத்தின் உதிரிபாகங்களைப் பிரித்துக் கொண்டிருந்த திருடன் மாட்டினார்..!

  • Jun 26, 2026 - 11:20 AM
  • 0 Comments

கண்டி மாநகர சபைக்கு முன்னால் வாகனத்தின் உதிரிபாகங்களைப் பிரித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன் பிடிபட்டு, கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த நபர் ஏற்கனவே இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/2296938411045005

nutrition awareness walk exhibition | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போசாக்கு விழிப்புணர்வு நடை பவனியும் போசாக்குவிழிப்புணர்வு கண்காட்சியும்..!

  • Jun 26, 2026 - 11:15 AM
  • 0 Comments

போசாக்கு மாதத்தை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இன்றைய தினம் நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் போசாக்கு விழிப்புணர்வு பேரணியை ஆரம்பித்துவைக்க நெல்லியடி சந்தியிலிருந்து ஆரம்பமாகி நெல்லியடி மத்திய கல்லூரி ஊடாக வதிரி சந்தியை சென்றடைந்து அங்கிருந்து மாலை சந்தை வழியாக சென்ற பேரணி வடமராட்சி தெற்கு மேற்கு […]

trincomalee audit management meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்..

  • Jun 26, 2026 - 11:06 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது நேற்று (25.06.2026) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அரச நிறுவனங்களின் நிதி ஒழுங்குமுறை, வளங்களின் பயனுள்ள பயன்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், மாவட்ட செயலகம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின் கணக்காய்வு தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. […]

kishore removal thenmaradchi shutdown | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிசோரின் பதவி பறிப்பால் தென்மராட்சியில் முழு கடையடைப்பு..!

  • Jun 26, 2026 - 10:53 AM
  • 0 Comments

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர் , உப தவிசாளரின் பதவியை நீக்கியும் , நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் […]

thaiyitti viharai bhavani veethi vazhakku next hearing | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரையை அண்மித்த பவானி வீதி விடுவிப்பு வழக்கு – மூன்றாவது தடவையாக கட்டளைக்கு திகதி குறிப்பு..!

  • Jun 26, 2026 - 10:47 AM
  • 0 Comments

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்று திகதியிட்டுள்ளது. குறித்த கட்டளை இன்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்படும் என கடந்த மே மாதம் 21ஆம் திகதி மன்று திகதியிட்டிருந்த நிலையில் , இன்றைய தினம் வழக்கு எடுத்து […]

ilangai west indies 1st test day 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை – மேற்கிந்தியா 1ம் டெஸ்ட் – இரண்டாம் நாள்..!

  • Jun 26, 2026 - 10:43 AM
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (26) இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் நோர்த் சவுண்ட் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி தமது முதலாம் இனிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் […]

kattunayake airport issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாட்டினார் மாட்டியா..!

  • Jun 26, 2026 - 10:40 AM
  • 0 Comments

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர், நேற்றிரவு (25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த […]

sri lanka weather today 5 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 26, 2026 - 10:34 AM
  • 0 Comments

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26.06.2026) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று அதிகாலை வௌியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய […]

akkaraipattu east weed control awareness | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களைநெல் கட்டுப்பாடு குறித்து அக்கரைப்பற்று கிழக்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு.

  • Jun 25, 2026 - 03:46 PM
  • 0 Comments

நாடு முழுவதும் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களைநெல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு இன்று (25) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ. பெரோஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் களைநெல் முகாமைத்துவம், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், வயல் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியம் மற்றும் களைநெல்லை பாதுகாப்பான முறையில் அகற்றி எரித்து அழிக்கும் நடைமுறைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊