உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருமலையில் ஆன்மீகத் தலைவர்களை சந்தித்த சிறீதரன் MP…..!

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், நேற்றைய தினம்(01.04.2026) திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் (Rt. Rev. Dr. Christian Noel Emmanuel) ஆண்டகை மற்றும் தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோரைச் சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.

​திருகோணமலை மறைமாவட்ட ஆயர் இல்லம் மற்றும் கன்னியா, சிவன்மலை, தென்கயிலை ஆதீனம் ஆகியவற்றில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

​இச்சந்திப்பில் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களான பாரதிதாசன் எழில்வேந்தன், திரு. தனராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்