உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான கலந்துரையாடல் ..!

  • Mar 26, 2026 - 12:17 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம்(26.03.2026) யாழ் பொஸ்ட் விடுதியில் இடம் பெற்றது இவ் விசேட கலந்துரையாடலானது காலை 10 :30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றது மற்றும் இவ் கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சம கால அரசியல் நிலைப்பாடுகள் ,எதிர் கால அரசியல் நகர்வுகள் , சம கால அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாட பட்டது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றம் வேண்டாம்..!

  • Mar 26, 2026 - 12:14 PM
  • 0 Comments

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை(26.03.2026) சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்ட சில ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேன் முறையீடுகள் செய்துள்ளனர். இதனால் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் , வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் […]

ஈழம் செய்திகள் புதியவை

இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல..!

  • Mar 26, 2026 - 11:12 AM
  • 0 Comments

இலங்கைத் தீவானது இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான “சிங்கள தேசம்” என்று முன்னிறுத்தப்பட்டாலும், வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன. ஆனால், வரலாற்றைத் திரித்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு ஆதிக் குடியாக வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் திகழும் தமிழைப் போன்று சிங்களம் ஒரு தூய மொழி அல்ல. மொழியியல் ரீதியாகப் பார்க்கும்போது, சிங்களம் […]

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாசத்தை வென்ற தேசப்பற்று..!

  • Mar 26, 2026 - 11:09 AM
  • 0 Comments

நான் வீட்டுக்கு போகிறதே இல்லை, என்னுடைய தம்பி செத்த பிறகு அம்மாவினுடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு கஸ்ரமாக இருக்கும். நாங்கள் இரட்டைக் குழந்தைகள், என்னை மாதிரியே அவனும் இருப்பான். நாங்கள் நான்கு பெடியன்கள், இரண்டு தங்கைகள். என்னுடைய மூத்த அண்ணன் எம் மண்ணில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்த நேரம் எங்கோ காணாமல் போய் விட்டான். ஏதோவொரு காட்டில் இராணுவத்தினரால் அவன் கொல்லப்பட்டிருக்கலாம். அதன் பின் நானும் எனது மற்ற அண்ணனும் இயக்கத்திற்கு சென்று விட்டோம், அப்போது தம்பிதான் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலகோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இருவர் கைது..!

  • Mar 26, 2026 - 11:02 AM
  • 0 Comments

10கோடி ரூபாவிற்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு இலங்கை பயணிகள், விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (26.03.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘பசுமை வழி’ ஊடாக இந்தப் போதைப்பொருளை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே இவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளில் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த 12 ​பெக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோ […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது..!

  • Mar 26, 2026 - 10:23 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 57 போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை பாவனை அதிகமாக காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , பொலிஸார் மேற்கொண்ட வ விசேட நடவடிக்கையின் போதே , ஐந்து இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து 57 போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை..!

  • Mar 26, 2026 - 10:19 AM
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தெஹ்ரானுக்கு எண்ணம் இல்லை என்றும், ஈரான் தொடர்ந்து போரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு, எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை என அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேலும் எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன். இப்போது பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்க […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை..!

  • Mar 26, 2026 - 09:48 AM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றுடன் (25.03.2026) ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாகச் சிறிதளவு உயர்ந்துள்ளதுடன், இது 1% அதிகரிப்பு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.3 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.10% உயர்வாகும். அதேவேளை, மர்பன் (Murban) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 டொலர்களாகக் காணப்படுகிறது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியது..!

  • Mar 26, 2026 - 09:37 AM
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சந்தையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தையில் நுகர்வோர் அநீதிக்குள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சில வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைப்பதன் மூலம் சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கவும், பொருட்களின் விலைகளை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பொலிசார் நினைத்தவுடன் கைது செய்ய முடியாது..!

  • Mar 26, 2026 - 09:27 AM
  • 0 Comments

பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp