ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாசத்தை வென்ற தேசப்பற்று..!

e0aeaae0aebee0ae9ae0aea4e0af8de0aea4e0af88 e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0ae9ae0aeaae0af8de0aeaae0aeb1e0af8de0aeb1e0af81 | Pathivu News

நான் வீட்டுக்கு போகிறதே இல்லை, என்னுடைய தம்பி செத்த பிறகு அம்மாவினுடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு கஸ்ரமாக இருக்கும். நாங்கள் இரட்டைக் குழந்தைகள், என்னை மாதிரியே அவனும் இருப்பான்.

நாங்கள் நான்கு பெடியன்கள், இரண்டு தங்கைகள். என்னுடைய மூத்த அண்ணன் எம் மண்ணில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்த நேரம் எங்கோ காணாமல் போய் விட்டான். ஏதோவொரு காட்டில் இராணுவத்தினரால் அவன் கொல்லப்பட்டிருக்கலாம். அதன் பின் நானும் எனது மற்ற அண்ணனும் இயக்கத்திற்கு சென்று விட்டோம், அப்போது தம்பிதான் வீட்டில் நின்றவன்.

எங்களில் இருந்த பாசம், ஏக்கம் எல்லாவற்றையுமே அம்மா தம்பியில்தான் தீர்த்துக் கொண்டாள். அவனும் வீட்டிலிருந்தபடியே ஒரு விடுதலைப்புலியாக இருந்தான். 1988ல் ஒரு நாள் தம்பியுடன் நல்லவன் மாதிரிப் பழகிய ஒருவனே அவனைக் கூட்டிச் சென்று தேச விரோதிகளின் கொலை வலைக்குள் வீழ்த்தி விட்டான். அம்மாவிற்கு கட்டிப் பிடித்து அழக்கிடைத்ததோ அவனது அழுகிப்போன உடல்தான்.

அதன் பின் வீட்டிலிருந்தது என்னுடைய இரண்டு தங்கைகளும் தான். (சுதர்மினா) என்னுடைய சின்னத் தங்கச்சி நாங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கும் பொழுது இவள் சின்னப்பிள்ளை, நாங்கள் எல்லோருமே அடிப்பதாக இருந்தாலும் கொஞ்சுவதாக இருந்தாலும் இவளைத் தான்,

சுதா, முதல் ஒரு முறை இயக்கத்திற்கு வந்தாள். அவளை இயக்கம் திருப்பி அனுப்பியது, எங்கள் வீட்டில் ஏற்கனவே இருவர் இல்லை நானும் இயக்கத்தில் உள்ளேன் என எம்மவர்கள் நினைத்திருக்கலாம். ஆனா லும் அவள் மீண்டும் இயக்கத்திற்கு வந்து விட்டாள். தன் மண்ணிற்காக போராடும் உரிமையை அவள் வேண்டி நின்றாள். அவளுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று நான் தலைவரிடம் கூறினேன். அதன் பின் சுதாவும் இயக்கத்தில் இணைந்து கொண்டாள். விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் எங்கள் வீட்டுக்குள் ஆழமாகவே புகுந்தது.

மாங்குளம் இராணுவ முகாம் தாக்குதல் தொடங்கியது. நான் தான் மருத்துவப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தேன். தங்கச்சியும் அந்தத் தாக்குதலுக்கு வந் திருக்கிறாள், என்பது எனக்குத் தெரியும். ஆனால் வேலைகளின் சுமை, நான் அவளைக் கவனிக்கவே இல்லை.

சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரம்,காய மடைந்தவர்களின் தொகையும், வீரமர ணமடைந்தவர்களின் தொகையும் அதிகரித்த படியே இருந்தது. மருத்துவப்பிரிவு வீட்டில் எமது தோழர்கள் 40 பேரின் ‘உடல்கள் வந்து அடுக்கப்பட்டிருந்தன நான் ஒவ்வொருவரின் முகங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு முகத்தை மூடியிருந்த துணியை அகற்றிய பொழுது அதை எனக்கு எப்படிச் சொல்வ தென்று தெரியவில்லை. எனதுசின்னத் தங்கச்சியின் சிதைந்த முகம் தெரிந்தது. என்நெஞ்சம் அழுதது உடல் படபடத்தது.

நான் திரும்பிப் பார்த்தேன். இன்னும் 39 பேர் -அவர்களும் எனது தங்கைகள், தம்பிகள் – நான் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன், எங்கள் விடுதலைப் போராட்டம் வெற்றியடைவதற்கு இழப்புகள் தவிர்க்க முடியாதது. என்னை மாதிரித்தான் இன்னும் ஒவ்வொருவரும் எங்கள் தேசம் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக எத்தனையோ தம்பிகளையும், தங்கைகளையும் இழக்கப் போகிறார்கள். என் அம்மாவை மாதிரித் தான் – எங்கள் தேசமெங்கும் தாய்மார்கள் இருக்கப் போகிறார்கள்.

காட்டோரமாக இருக்கும் எங்கள் வீட்டுக்குச் செல்லும் செம்மண் வீதியும், தவறு தலாக ஊருக்குள் வந்து நிற்கும் காட்டு மரங்களும் என்னை வா வா என்றழைக் கும். ஆனாலும் என்னைப் பெற்று வளர்த்த தாயையும், தவழ்ந்து விளையாடிய மண்ணையும், மரங்களையும் விட்டு நான் ஏன் விலகி ஓடுகின்றேன் .உண்மைதான் பலமான ஆக்கிரமிப்பாளனின் ஆயுதத்தை விட ஒரு தாயின் கண்ணீருக்கு சக்தி அதிகம். ஆனால் இது இந்த தேசத்தின் நியதி.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp