உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வராத அதிபர், ஆசிரியர்களுக்கு விசாரணை..!

e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0af88e0aeaae0af86e0aeb1 | Pathivu News

கடந்த மார்ச் 15ஆம் திகதி தங்காலை நகர மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளாமை தொடர்பாக தங்காலை வலயக் கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்பியுள்ளார்.

குறித்த கூட்டத்திற்கு ஆசிரியர்கள் சமூகமளிக்காததற்கான காரணங்களை தெளிவுபடுத்தி, மார்ச் 26ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரசு இயந்திரத்தின் செயற்பாடுகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே பிரதமரின் தலைமையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp