உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்போதைை நாணய கொள்கையில் மாற்றமில்லை..!

  • Mar 25, 2026 - 11:04 AM
  • 0 Comments

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24.03.2026) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) தற்போதைய மட்டமான 7.75% என்ற அளவில் மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மாள் ஆலய மகா சங்காபிஷேகம்..!

  • Mar 25, 2026 - 10:12 AM
  • 0 Comments

தேசத்து ஆலயமாக விளங்கும் வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மாள் ஆலய மகா சங்காபிஷேகம் நேற்றையதினம்(24.03.2026) இடம்பெற்றது. மேற்படி சங்காபிஷேகமானது ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்களின் வழிகாட்டலில் 108 சங்குகளுடன் சங்காபிஷேக கிரிகைகள் ஆலய குரு சிவஸ்ரீ கோபர்த்தனக்குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ சபாரெத்தினக் குருக்கள், சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் ஒத்துழைப்புடன் சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களிற்கு மீனாட்சி அம்மாளின் திருவுருவப்படங்கள் வழங்கப்பட்டன. காரைதீவு இசைக்கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கத்தின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விவசாயிகளின் சவால்கள் குறித்து தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு..!

  • Mar 25, 2026 - 09:51 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த தற்போதைய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர் நேற்றைய தினம் (24.03.2026) மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். ​இந்த சந்திப்பின் போது ​சிறு குளங்கள் அபிவிருத்தி, மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சிறு குளங்கள் மீளப்புனரமைப்பு, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆளணிப் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் இடம்பெற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்..!

  • Mar 24, 2026 - 12:33 PM
  • 0 Comments

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24.03.2026) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன. கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வின் ஆரம்பமாக, காசநோய் ஒழிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதாரத் துறையினரின் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூரில் இரு குழுக்களுக்கிடையே சரமாரி வாள்வெட்டு..!

  • Mar 24, 2026 - 12:15 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23.03.2026) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற கண்காட்சி ஒன்றின் போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று(23.03.2026) இரவு 9.00 மணியளவில் ஒரு குழுவினர் மற்றைய தரப்பினரின் வீட்டிற்குச் சென்று வாள்வீச்சுத் தாக்குதலை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது பொலிஸார் தாக்குதல்..!

  • Mar 24, 2026 - 10:58 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நிறைபோதையில் காணப்பட்ட பொலிஸார் சுற்றுலாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதிக்கு நேற்றைய தினம் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்று , அங்கு சமைத்து உணவுண்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது பருத்தித்துறை பகுதியில் இருந்து மணற்காட்டுக்கு சுற்றுலா சென்ற குழு ஒன்றுடன் தர்க்கப்பட்டு , இரு குழுக்களுக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தொண்டமானாறு செல்வ சந்நிதியானுக்கும் தடுப்பு வேலிகள்..!

  • Mar 20, 2026 - 11:33 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்திற்கும் முகப்பிற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதியானை காண வரும் அடியவர்கள் இடையூறின்றி சென்று சந்நிதியானை வணங்குவதற்கும், ஆலய வளாகத்திற்குள் வாகனங்கள் உட்செல்வதால் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதுமட்டுமல்லாது வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய தேவையற்ற செயற்பாடுகளை தவிர்ப்பதற்காகவும், ஆலயத்தின் புனித தன்மையை பேணுவதற்காகவும் இந்த தடுப்பு வேலி ஆலய முகப்பில் போடப்பட்டுள்ளது. அதெவேளை தற்போது முகப்பில் மட்டுமே வேலி. […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சார வரியை குறைக்க தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்..!

  • Mar 20, 2026 - 10:07 AM
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடற்படையின் பெரும் வேட்டை: 75 பில்லியன் ரூபா போதைப்பொருள் கைப்பற்றல் 376 பேர் கைது

  • Jan 3, 2026 - 09:09 AM
  • 0 Comments

இலங்கை கடற்படை 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளிலும் கடல் எல்லைகளிலும் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது, சுமார் 75 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களை கைப்பற்றி, 376 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளில், 1,050 கிலோகிராம் ஹெரோயின், 2,982 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 5,768 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா, 257 கிலோகிராம் உள்நாட்டு கஞ்சா, 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், குஸ் மற்றும் பெருமளவு சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரை கட்டிடத்தை அகற்றுமாறு போராட்டம்

  • Sep 7, 2025 - 05:29 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் பூரணை தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்றைய தினமும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp