flood disaster drill held in batticaloa | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த ஒத்திகை நிகழ்வு..!

  • Sep 29, 2026 - 11:32 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்த ஒத்திகை நிகழ்வு நேற்று (28.09.2026) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வொத்திகை, வந்தாறுமூலை மேற்கு மற்றும் சித்தாண்டி 2, 3, 4 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. […]

gun and ammunition found hidden in a lake in tamil area | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கூடுகள் கண்டுபிடிப்பு..!

  • Sep 29, 2026 - 11:20 AM
  • 0 Comments

வவுனியா மாவட்டம், செட்டிக்குளம் பகுதியில் உள்ள நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி-56 ரக துப்பாக்கி, 3 தோட்டாக்கூடுகள் மற்றும் 84 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது இந்தத் துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன. ஏதோ ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட ஒரு கும்பல் இந்தத் துப்பாக்கியை அந்த இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. வவுனியா பொலிஸார் […]

namal rajapaksa produced before court | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷ..!

  • Sep 29, 2026 - 11:10 AM
  • 0 Comments

சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் இன்று (29.09.2026) காலை அழைத்துவரப்பட்டார். சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பேரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

e0ae95e0aebee0aeb2e0af8de0aea8e0ae9fe0af88 e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb0e0aebfe0ae95 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு..!

  • Sep 29, 2026 - 11:05 AM
  • 0 Comments

கால்நடை வைத்திய அதிகாரிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காணத் தயாராக இருப்பதுடன், பதவியுயர்வுக்கான புள்ளித் திட்டமிடல் முறை தொடர்பில் மறுபரிசீலனை செய்து விரைவாகத் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளை பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். […]

protest in toronto canada against removal of thileepan statue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தியாகி திலீபன் உருவச்சிலை அகற்றல்- TORRONTO-CANADA வில் இடம்பெற்ற கண்டனப்போராட்டம்..!

  • Sep 29, 2026 - 11:01 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நல்லூர்பகுதியில் தியாகதீபம் திலீபன் அவர்களின் உருவச்சிலை பொலிசாரால் அகற்றப்பட்டமையை கண்டித்து இன்று திங்கட்கிழமை(28.09.2026) பிற்பகல் 2.00மணியளவில் இலங்கை துணைத்தூதரகம் முன்பாக கண்டனப்போராட்டம் ஒன்று கனடியத்தமிழர் சமூகம் மற்றும் மாணவர் சமூகத்தினர் ஏற்பாட்டில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. காணொளி இணைப்பு:https://www.facebook.com/reel/2124407328159898

fire spreads near residential area in point pedro | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்..!

  • Sep 29, 2026 - 10:47 AM
  • 0 Comments

நகரசபையினர் துரிதமாக செயற்பட்டு தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட தும்பளை கிழக்கு பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் நகரசபையின் துரிதமாக செயற்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது. பருத்தித்துறை – தும்பளை கிழக்கு, உடையார் வீதியில் வீதியோரமாக உள்ள காணி ஒன்றில் நேற்று (28.09.2026) திங்கட்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ வீதியோரமாக நின்றிருந்த பனை, […]

motorcycle accident in jaffna police officer killed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் அறுகுவெளி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..!

  • Sep 29, 2026 - 10:22 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மன்னார் ஏ35 வீதி, அறுகுவெளிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(29.09.2026) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தோடு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பூநகரி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் மன்னார் – வட்டக்கண்டல் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய எமிலியானுஸ் அன்ரனி என பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

jaffna teaching hospital velankanni church feast | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ். போதனா வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா..!

  • Sep 29, 2026 - 10:18 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பேரருட்திரு கலாநிதி அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை திருவிழா திருப்பலியை நிறைவேற்றி ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து, நோயாளிகள் விரைவில் நலம் பெறவும், அவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் தமது சேவையை சிறப்பாக முன்னெடுக்கவும் விசேட இறைவேண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.  

if the government wasnt behind the statue removal restore it | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிலை அகற்றியதற்கு அரசாங்கம் காரணமில்லை என்றால் சிலையை மீள வையுங்கள்..!

  • Sep 29, 2026 - 10:08 AM
  • 0 Comments

நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமைக்கு அரசாங்கம் காரணமில்லை என்றால் , அவ்விடத்தில் சட்ட ரீதியாக சிலையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்ட விடயத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சி . வீ.கே சிவஞானத்திடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் பொலிஸார் சிலையை அகற்றிய விடயத்திலே […]

protest in thirukkovil against removal of thileepan statue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தியாகி திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து திருக்கோவிலில் போராட்டம்..!

  • Sep 29, 2026 - 10:01 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக,நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு கோரியும் நேற்று திங்கட்கிழமை (28.09.2026) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில், தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு இப்போராட்டம், முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப நாளான கடந்த 15ஆம் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊