உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடற்படையின் பெரும் வேட்டை: 75 பில்லியன் ரூபா போதைப்பொருள் கைப்பற்றல் 376 பேர் கைது

இலங்கை கடற்படை 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளிலும் கடல் எல்லைகளிலும் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது, சுமார் 75 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களை கைப்பற்றி, 376 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.

இந்த நடவடிக்கைகளில், 1,050 கிலோகிராம் ஹெரோயின், 2,982 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 5,768 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா, 257 கிலோகிராம் உள்நாட்டு கஞ்சா, 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், குஸ் மற்றும் பெருமளவு சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 67,200 கிலோகிராம் பீடி இலைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் போது பல உள்நாட்டு படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கால தலைமுறைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முழுநாடும் ஒன்றா என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படை தொடர்ந்தும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்