சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு..!
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (03.06.2026) காலை ஒன்றுகூடலின் போது இடம்பெற்றது. பாடசாலை பதில் அதிபர் கலாநிதி கதிரேசபிள்ளை விருத்தாசலம் தலைமையிலும், பகுதித் தலைவர்களின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பற்றிய கருத்துரைகளும், வாழ்த்துக் கவிகளும் […]









