உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 128வது சிரார்த்த தின நிகழ்வு..!

  • Mar 31, 2026 - 12:06 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 128வது சிரார்த்த தின நிகழ்வு இன்று 31.03.2026 மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவரும் மாநகர […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்..!

  • Mar 31, 2026 - 11:44 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.03.2026) மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் தவிசாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன இறுதியில் விசேட செய்தியாளர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு..!

  • Mar 31, 2026 - 11:24 AM
  • 0 Comments

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து கட்டாக்காலி மாடுகளை திங்கட்கிழமை(30) இரவு பிடித்துள்ளனர். சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்துக்கப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன்இ பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து கட்டாக்காலி மாடுகள் பிடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக, பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொத்து மற்றும் ரைஸ் விலைகள் உயர்வு..!

  • Mar 31, 2026 - 11:06 AM
  • 0 Comments

இன்று (31.03.2026) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் அந்தச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்..!

  • Mar 31, 2026 - 11:03 AM
  • 0 Comments

சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை சட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரேல்..!

  • Mar 31, 2026 - 10:58 AM
  • 0 Comments

உயிரைப் பறிக்கும் வகையிலான கொடூரமான தாக்குதல்களை நடத்தும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30.03.2026) நிறைவேற்றியுள்ளது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 31, 2026 - 09:25 AM
  • 0 Comments

31.03.2026 நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நீர் வெட்டு தொடர்பில் வௌியான தகவல்..!

  • Mar 30, 2026 - 01:20 PM
  • 0 Comments

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது சபை அவ்வாறான நீர் வெட்டு எதனையும் அமுல்படுத்தவில்லை. எனினும், நிலவும் காலநிலை நீடித்தால் வரும் நாட்களில் நாள் முழுவதும் தடையின்றி நீர் வழங்குவது கடினமாக அமையும். […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தரமற்ற நிலக்கரி கொள்வனவு மோசடியில் ஜனாதிபதி அநுரவும் பங்காளி..! சம்பிக்க ரணவக்க

  • Mar 30, 2026 - 01:16 PM
  • 0 Comments

தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியும் இந்த மோசடியின் பங்காளியாக உள்ளார். அவரும் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அவிசாவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி உரிமைப் போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்..!

  • Mar 30, 2026 - 11:37 AM
  • 0 Comments

உண்மை வெல்ல உறவே எழு..! தையிட்டியில்சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்களின் உரிமை காக்கும் அமைதிப் போராட்டத்துக்கு அழைப்பு. காலம் :- 31.03.2026 – மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மறுநாள் புதன்கிழமை 01.04.2026 (பெளர்ணமி தினம்) – காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த போராட்டத்தில் அனைத்து பொதுமக்களும், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், எந்தவொரு பேதமும் இன்றி ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp