உலகம்

போப் ஆண்டவர் பிரான்சிஸின் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளதாக வட்டிகான் அறிவித்துள்ளது

  • Feb 21, 2025 - 07:56 AM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயதுடைய போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இதற்கிடையே, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் இந்தியர்களுக்கு 182 கோடி ரூபாவினை பைடன் கொடுத்ததாக டிரம்ப் குற்றச்சாட்டு

  • Feb 21, 2025 - 07:45 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது. இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும், தங்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டியதில்லை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியாவினால் இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

  • Feb 20, 2025 - 05:12 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கான நிறுவனம் (ளுடுஐனுயு) ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு 1,500 இலங்கை சிவில் அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழிவகை செய்வதாக அமைந்துள்ளது. இலங்கை அரசின் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் அழைப்பின் […]

இந்தியா உலகம் கனடா செய்திகள் முக்கிய செய்திகள்

கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் எங்கேயென இந்தியாவில் விசாரணை

  • Feb 20, 2025 - 07:22 AM
  • 0 Comments

திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ‘பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அந்த பார்சல்களில் 6,600 தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. அவற்றின் எடை சுமார் 400 கிலோகிராம். கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

6 பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறித்துள்ளது

  • Feb 19, 2025 - 07:41 AM
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூத்த நபர் ஒருவர், சனிக்கிழமை ஆறு உயிருள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை நான்கு பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த ஆறு பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக்கைதிகள் ஆவர். ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் அறிவிப்பில், […]

செய்திகள் முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீதான தாக்குதலின் பின்னணியில் பொலிஸார் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்

  • Feb 19, 2025 - 07:31 AM
  • 0 Comments

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றின் மூலம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வீடொன்றின்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

  • Feb 18, 2025 - 06:19 PM
  • 0 Comments

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (17-02-2025) இரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த வீட்டில் யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளரைப் பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வீட்டின் சில பகுதிகள் பாதிப்படைந்துள்ளது இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்ட எதிரொலி உணவுப்பொருட்கள் இன்று முதல் விலை அதிகரிப்பு

  • Feb 18, 2025 - 06:05 PM
  • 0 Comments

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாவரவு செலவு திட்ட எதிரொலி உணவுப்பொருட்கள் இன்று முதல் விலை அதிகரிப்பு சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில்இ இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. […]

செய்திகள் முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்று தொடக்கம் 25ம் திகதி வரை நடைபெறும்

  • Feb 18, 2025 - 05:16 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp