kalvayal bridge foundation stone laid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி கல்வயல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

  • Jul 15, 2026 - 10:42 AM
  • 0 Comments

கிராமங்களில் உள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கல்வயல் நுணாவில் வீதியில் உள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்து அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

sri lanka dengue deaths 49 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

49 ஆக அதிகரித்த டெங்கு மரணங்கள்..!

  • Jul 15, 2026 - 10:36 AM
  • 0 Comments

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று (14.07.2026) வரையான தரவுகளின்படி நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 71,235 ஆக பதிவாகியுள்ளதுடன், 49 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

millaniya chairman death threat | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மில்லனிய பிரதேச சபை தவிசாளருக்கு மரண அச்சுறுத்தல்..!

  • Jul 15, 2026 - 10:33 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கொண்டுள்ள மில்லனிய பிரதேச சபையின் தவிசாளர் ஜயதுங்க கமகே சமன் சுஜீவவுக்கு, அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்பு மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (15) அதிகாலை 1 மணியளவில் நபர் ஒருவர் தவிசாளரின் கைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டு, ‘விடிவதற்குள் கொலை செய்துவிடுவதாக’ அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு, தவிசாளர் உடனடியாகப் பொலிஸ் […]

central province governor resignation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய மாகாண ஆளுநர் ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை கையளித்தார்..!

  • Jul 15, 2026 - 10:29 AM
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இந்த இராஜினாமா கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும், இந்த இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்றும் பேராசிரியர் சரத் அபேகோன் ‘அத தெரண’ செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். அத்துடன், தான் பதவியிலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவு […]

naita trains 60 electricians | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஊடாக பயிற்சிபெற்ற 60 மின்னியலாளர்கள்..!

  • Jul 15, 2026 - 10:25 AM
  • 0 Comments

இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகைமை (NVQ 3) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு.ஜெயநாத் கேரத் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(15.07.2026) மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு, தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்சி பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 மின்னியலாளர்களுக்கான சான்றிதழ்களை […]

tamil area school incident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்குள் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..!

  • Jul 15, 2026 - 09:57 AM
  • 0 Comments

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று பாடசாலை நேரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், உயர்தர வகுப்பில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள் இரும்புக் கம்பியுடன் மற்றொரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் […]

mushroom farming insurance scheme | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் காளான் வளர்ப்பிற்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம்..!

  • Jul 15, 2026 - 09:53 AM
  • 0 Comments

காளான் வளர்ப்பிற்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ், 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு கூடம் ஒன்றினை மூன்று மாத காலத்திற்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணம் சுமார் 2,025 ரூபாயாகும். அத்துடன், நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்கள் காரணமாக காளான் வளர்ப்பிற்கு சேதம் ஏற்பட்டால், 22,500 ரூபாய் காப்புறுதி […]

land release statement denied | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறவில்லையாம்..!

  • Jul 15, 2026 - 09:49 AM
  • 0 Comments

மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாடாளுமன்றில் கூறவில்லை. அவர் கூறிய விடயங்களை சிலர் அரசியல் தேவைகளுக்காக திரிவுபடுத்தி கூறுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பால நிர்மாணிப்புக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார், மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறவில்லை. […]

karainagar theft two arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காரைநகரில் தங்கி இருந்த வெளிநாட்டவர்களின் நகைகள்,பணங்கள் திருடிய குற்றத்தில் இருவர் கைது..!

  • Jul 15, 2026 - 09:40 AM
  • 0 Comments

புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைகளை கழிக்க தமது சொந்த இடமான யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்திருந்த குடும்பத்தினர்களின் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரில் புலம்பெயர் குடும்பத்தினர் தங்கி இருந்த வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் தங்கியிருந்தவர்களின் 400 அமெரிக்க யூரோ மற்றும் ஒரு இலட்சம் ரூபா இலங்கை ரூபாய்க்கள் என்பனவும் களவாடப்பட்டன. சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் […]

crude oil price increase | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் அதிகரித்தது கச்சா எண்ணெய் விலை..!

  • Jul 15, 2026 - 09:36 AM
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா விதித்த புதிய கடற்படை முற்றுகை மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15.07.2026) மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.40 டொலராகவும் உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூன் மாத பாதியிலிருந்து பதிவான அதிகபட்ச விலை உயர்வு என்று வெளிநாட்டு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊