easter attacks 8 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள்..!

  • Apr 21, 2026 - 10:23 AM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21.04.2026) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்படி, தேவாலயங்களில் மணி ஒலி எழுப்புதல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது […]

event started | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சற்று முன்னர் ஆரம்பமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவு கூறும் விசேட ஆராதனை..!

  • Apr 21, 2026 - 10:18 AM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினத்தை நினைவு கூறும் வகையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை ஆரம்பமாகியுள்ளது.

thera and others | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பஞ்ஞாகர தேரர் உள்ளிட்டோர் இலங்கை வருகை..!

  • Apr 21, 2026 - 10:10 AM
  • 0 Comments

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21.04.2026) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த சமாதான நடைபயணத்திற்காக ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற “Walk For Peace” சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அநுராதபுரம் ஜய ஸ்ரீ […]

homagama area | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஹோமாகம, கட்டுவான பகுதியில் போதைப்பொருள் சோதனையில் சிக்கிய முக்கிய குற்றவாளி..!

  • Apr 21, 2026 - 10:04 AM
  • 0 Comments

ஹோமாகம, கட்டுவான பகுதியில் 20 கிராம் 830 மில்லிகிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிகவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஹோமாகம, மகரகம மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நான்கு முச்சக்கர வண்டிகளை திருடிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. […]

auditor | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை; அமைச்சர் வசந்தவின் நிலைப்பாடு..!

  • Apr 21, 2026 - 10:00 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலுள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (20) இரவு டி.வி. தெரணவின் ‘360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் மோசடி நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், ஏற்படக்கூடிய சாத்தியமான நிலமைகள் குறித்து மட்டுமே அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த […]

sl weather 18 9 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 21, 2026 - 09:53 AM
  • 0 Comments

21.04.2026 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் […]

nindavur event | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நிந்தவூரில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தல் குறித்து விரிவான கலந்துரையாடல்..!

  • Apr 21, 2026 - 09:50 AM
  • 0 Comments

நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சீர்கேடுகளை கட்டுப்படுத்தி, சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தி சமூக பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள், ஒழுக்கச் சீர்கேடுகள் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய […]

financial assistant appointment | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நிதி உதவியாளராக சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ் எம் எப் அமான் நியமனம்..!

  • Apr 21, 2026 - 09:42 AM
  • 0 Comments

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதி உதவியாளராக மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் திருமதி எஸ். எம். எப். அமான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம் எஸ் ஸஹதுல் நஜீம் நேற்றைய தினம் (20.04.2026) வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கல்முனை வலய கல்வி அலுவலக கணக்காளர் ரீ .லிங்கேஸ்வரனும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருமதி எஸ் .எம். எப். […]

drug abuse | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

போதைப்பொருள் பாவனை சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகிறது..!பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்

  • Apr 21, 2026 - 09:36 AM
  • 0 Comments

நிந்தவூர் பிரதேசத்தில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்மபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை(19) இரவு நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கருத்து தெரிவிக்கையில், அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள் போன்ற சமூக பிரச்சினைகள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இவ்வாறான சவால்களை தனிப்பட்ட முயற்சிகளால் சமாளிக்க முடியாது, மத நிறுவனங்கள், சமூக அமைப்புகள், […]

gregory lake nuwara eliya | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நுவரெலியா கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்த திட்டம்..!

  • Apr 20, 2026 - 01:24 PM
  • 0 Comments

நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார். நேற்று (19.04.2026) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நுவரெலியா கிரகரி வாவியில் சுமார் 120 சுற்றுலா படகுகள் உள்ளன. நேற்று இடம்பெற்ற விபத்தையடுத்து, படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து இது குறித்து […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp