school mediation boards fathima elected in kalmunai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாடசாலைகளில் மத்தியஸ்த சபைகள்; கல்முனையில் பற்றிமா தெரிவு..!

  • Nov 17, 2026 - 03:09 PM
  • 0 Comments

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் (Ministry of Justice & National Integration) கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால், நாடளாவிய ரீதியில் பாடசாலை மத்தியஸ்த சபைகளை அமைக்கின்ற வேலைத்திட்டத்தில், இம்முறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 மாணவர்களுக்கு 3 நாள் விசேட பயிற்சி வழங்கப்பட்டது. அவ் விசேட பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் […]

diabetes awareness programme organised by chettipalayam divisional hospital | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு…

  • Nov 17, 2026 - 02:28 PM
  • 0 Comments

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்றைய தினம் பிரதேச வைத்திய சாலையில் பொறுப்பு வைத்தியர் திருமதி ஜீவிதா ஷியாம் ரக்கேஷ் தலைமையில் இடம்பெற்றது. நவம்பர் 14ம் திகதி உலக நீரிழிவு நோய் தினம், அதனையொட்டி பிரதேச வைத்தியாசலையின் நிருவாகம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு என்பன இணைந்து இன்றைய தினம் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு என்பவற்றை முன்னெடுத்திருந்தன. வைத்தியசாலையில் ஆரம்பித்த குறித்த விழிப்புணர்வு ஊர்வலமானது செட்டிபாளையம் பிரதான வீதியூடாக […]

ganesapillai balachandran elected new chairman of karainagar pradeshiya sabha | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காரைநகர் பிரதேசசபையின் புதிய தவிசாளராக கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் தெரிவு..!

  • Nov 17, 2026 - 11:35 AM
  • 0 Comments

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர். சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் […]

thirumavalavan visits the area where the leaders house is located | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தலைவரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு சென்ற திருமாவளவன்..!

  • Nov 17, 2026 - 11:07 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டார். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது. குறித்த பகுதியில் தான் புலிகளின் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்த […]

e0ae95e0aeb9e0aeb5e0aea4e0af8de0aea4e0af88 e0ae86e0aea4e0aebee0aeb0 e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeafe0ae9ae0aebee0aeb2e0af88 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து..!

  • Nov 17, 2026 - 10:56 AM
  • 0 Comments

கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டடமொன்றிலேயே இன்று (17.11.2026) அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகப் பரவிய தீயை அணைப்பதற்காக இரத்தினபுரி நகர தீயணைப்புப் பிரிவும் வரவழைக்கப்பட்டுள்ளது. தீ பரவியுள்ள கட்டடமானது இதற்கு முன்னர் உள்நோயாளர் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் குறித்த விடுதி புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகப் […]

rising expenditure among sri lankas middle class | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் மத்திய தர வர்க்கத்தின் செலவினம் அதிகரிப்பு..!

  • Nov 17, 2026 - 10:00 AM
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்த வரவு -செலவுத் திட்ட யோசனைகள் மூலம் மக்கள் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். குறிப்பாக, இந்நாட்டின் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன், அவர்களின் மாதாந்த வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று (16.11.2026) இரவு TV Derana வில் ஔிபரப்பான ‘360’ சமகால அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]

thol thirumavalavan pays tribute to semmani massacre victims | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி..!

  • Nov 17, 2026 - 09:58 AM
  • 0 Comments

செம்மணியில் படுகொலையானவர்களுக்கு இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள திருமாவளவன் , நேற்றைய தினம் செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் நினைவாக செம்மணி பகுதியில் உள்ள “அணையா விளக்கு” திடலுக்கு சென்று , அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார். காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1780542309691529

private investor proposes modern medical waste incineration facility in the north | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கில் நவீன மருத்துவக் கழிவு எரியூட்டு நிலையம் அமைக்கத் தனியார் முதலீட்டாளர் முன்மொழிவு..!

  • Nov 17, 2026 - 09:55 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் கையாள்வதற்கும், தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை எரியூட்டுவதற்குமான நிலையமொன்றைத் தனியார் முதலீட்டின் ஊடாக அமைப்பதற்கு முதலீட்டாளர் ஒருவர் முன்மொழிவை முன்வைத்திருந்தார். இது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது, குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. குறிப்பாக, இத்தகைய நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவுசெய்தல், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் […]

sudden increase in egg prices in sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு..!

  • Nov 17, 2026 - 09:53 AM
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்போது சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க குறிப்பிடுகையில், தற்போது சந்தையில் முட்டையொன்று 42 ரூபாவிற்கும் 45 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்படுவதாகத் தெரிவித்தார். முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்தமையும், முட்டைக்கான கேள்வி அதிகரித்தமையும் இந்த நிலைமைக்குக் காரணம் என அநுரசிறி மாரிசிங்க தெரிவித்தார். அதிக மழை காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டது. அதனால் 80 வீதமான உற்பத்தியை வழங்கிய விலங்குகள் 50% […]

cyclone akvan intensifies further today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அக்வான் புயல் இன்று மேலும் தீவிரமடைகிறது..!

  • Nov 17, 2026 - 09:48 AM
  • 0 Comments

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள அக்வான் புயல் இன்று (17.11.2026) மேலும் வலுவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. அக்வான் புயலானது தொடர்ந்தும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு – மத்திய வங்கக்கடல் கடல் பகுதியில் கடுமையான புயலாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊