கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் சுகுணன் விபத்தில் காயம்..!
மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை நிலைமை திருப்தி என்கிறார் பணிப்பாளர் முரளி கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் நேற்று (03.08.2026) திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயங்களுக்கு உள்ளாகி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரனிடம் கேட்ட பொழுது: நேற்று மாலை 7:30 மணியளவில் பணிப்பாளர் சுகுணன் விபத்துக்குள்ளாகி எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். […]









