colombo kandy main road reopens | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி திறப்பு..!

  • Aug 4, 2026 - 09:39 AM
  • 0 Comments

பாறைச் சரிவு காரணமாக கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (03.08.2026) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டதுடன், இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக […]

sri lanka weather today 23 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Aug 4, 2026 - 09:36 AM
  • 0 Comments

04.08.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா […]

kilinochchi iyakkachchi road accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி இயக்கச்சியில் வீதி விபத்து..!

  • Aug 3, 2026 - 02:13 PM
  • 0 Comments

கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியில் நின்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் வந்த ‘ஹயஸ்’ (HiAce) ரக வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பாரிய காயங்களுக்குள்ளான அப்பெண், உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பூ.லின்ரன் வடமராட்சி பச்சிளைப்பள்ளி […]

kilinochchi burnt body found | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தால் பரபரப்பு..!

  • Aug 3, 2026 - 02:10 PM
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில் இன்று (03.08.2026) எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள், குளக்கரைக்கு அருகே சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் […]

dickoya homes flooded | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

டிக்கோயாவில் பல வீடுகள் நீரில் மூழ்கின..!

  • Aug 3, 2026 - 02:06 PM
  • 0 Comments

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர் பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையினால், அதன் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் இன்று (03) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ​கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையினால் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டும் பிரதேசமக்கள், மீண்டும் பெருக்கெடுத்ததன் காரணமாகத் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர். ​இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்தமையினால் நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

harak kata bail request postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹரக் கட்டாவின் பிணைக் கோரிக்கை பிற்போடப்பட்டது..!

  • Aug 3, 2026 - 02:03 PM
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ​ குறித்த வழக்கு இன்று (03.08.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. […]

yoshitha karannagoda indictment filed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யோஷித, கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

  • Aug 3, 2026 - 02:01 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ​2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது, யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் […]

kenyon reservoir spill gates open | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கென்யோன் நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறப்பு..!

  • Aug 3, 2026 - 12:23 PM
  • 0 Comments

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கென்யோன் நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை 9.25.க்கு திறந்து விட பட்டு உள்ளது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1420325223279180

mahaweli river flood warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்..!

  • Aug 3, 2026 - 11:29 AM
  • 0 Comments

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (03) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளதுடன், அது நாளை (04) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​அதற்கமைய, மகாவலி கங்கையை அண்மித்துள்ள உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வறிவித்தல் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊