weapon attack | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை..!

  • Apr 6, 2026 - 11:10 AM
  • 0 Comments

பனாமுறை, வேஅதுர பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வேஅதுர, பனாமுறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (05.04.2026) இரவு அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இருவர் அவரை தாக்கியதுடன், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை […]

southern expressway | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக சாலையில் விபத்து – ஒருவர் பலி..!

  • Apr 6, 2026 - 10:09 AM
  • 0 Comments

தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கெண்டைனருடன் பின்னால் வந்த லொறி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (06.04.2026) முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்தார். தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 40 ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து மாத்தறை நோக்கிய திசையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

wattala textile | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வத்தளையில் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து..!

  • Apr 6, 2026 - 10:07 AM
  • 0 Comments

வத்தளை, மாபோல தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (06.04.2026) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

sammanturai development | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டி மண்ணின் முதல் பொறியியலாளர்..!

  • Apr 6, 2026 - 10:00 AM
  • 0 Comments

இவ்வாண்டில் வெளியாகிய கல்வி பொது உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டியை சேர்ந்த திரு. திருமதி. இரவிச்சந்திரன் மனோகரி தம்பதிகளின் புதல்வன் செல்வன் பவதாருணன் அவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அம்பாறை மாவட்டத்தில் 14வது இடத்தையும் தேசிய மட்டத்தில் 840 வது இடத்தையும் பெற்று புதிய வளத்தாப்பிட்டி வரலாற்றில் முதல் பொறியியல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை கிராமத்துக்கும் எதிர்கால கல்வி சமுதாயத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன், புதிய வளத்தாப்பிட்டி […]

chennai loss 2026 | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

2026 இலும் தோல்வியில் சென்னை அணி..!

  • Apr 6, 2026 - 09:53 AM
  • 0 Comments

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (05.04.2026) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டிம் டேவிட் 25 […]

national event today | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள் புதியவை

இன்று ஆரம்பமாகிறது தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்..!

  • Apr 6, 2026 - 09:51 AM
  • 0 Comments

இன்று (06.03.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் எட்டும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். […]

sl weather 18 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 6, 2026 - 09:47 AM
  • 0 Comments

06.04.2026 வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் […]

minor girl case | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிக்கு ; நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை..!

  • Apr 3, 2026 - 10:03 AM
  • 0 Comments

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]

us military chief | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி உடனடி ஓய்வு: பென்டகன் உறுதி செய்தது..!

  • Apr 3, 2026 - 09:57 AM
  • 0 Comments

இராணுவத் தலைமைத் தளபதியின் உடனடி ஓய்வை பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 41வது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ராண்டி ஜார்ஜ், உடனடியாகப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

high value goods | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பலகோடிரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது..!

  • Apr 3, 2026 - 09:48 AM
  • 0 Comments

பலகோடிரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது..! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று(02.04.2026) மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊