உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிக்கு ; நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை..!

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது.
நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து 29ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் முன் முற்படுத்தியவேளை பிக்குவை நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்கு மன்றில் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, பிக்குவின் விளக்கமறியலை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் நீதிமன்று நீடித்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்