e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebf e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae85e0aeb0e0ae9ae0aebee0ae99e0af8d | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பு..!

  • Apr 7, 2026 - 05:08 PM
  • 0 Comments

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இன்றைய தினம்(07.04.2026) கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். இச் சந்திப்பின் போது மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை, பொதுமக்கள் நலன், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. […]

nallur house damage | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நல்லூர் மந்திரி மனை அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது..!

  • Apr 7, 2026 - 10:21 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு வாரங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

chithirai new year | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்..!

  • Apr 7, 2026 - 10:16 AM
  • 0 Comments

சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் வரை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் பல பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தவும் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் […]

economic slowdown | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உலகப் பொருளாதாரம் மந்தமடையும் என IMF எச்சரிக்கை..!

  • Apr 7, 2026 - 10:11 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு […]

two electrocuted | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரம் தாக்கி இருவர் சாவு..!

  • Apr 7, 2026 - 10:05 AM
  • 0 Comments

பொல்கஹவெல, பங்களாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சாரம் தாக்கி இருவர் சாவடைந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயிர் நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, குறித்த காணியின் காவலாளியாகப் பணியாற்றிய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

iran overnight attack | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவோம்..!

  • Apr 7, 2026 - 10:00 AM
  • 0 Comments

ஈரானை ஒரே இரவில் அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (07) இரவு 8.00 மணியுடன் நிறைவடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார். இன்று இரவு 8.00 மணிக்குள் தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கைக்கு ஈரான் வரத் தவறினால், அந்த நாட்டுக்கு எதிராகக் கடுமையான அழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும் […]

sl today | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

  • Apr 7, 2026 - 09:44 AM
  • 0 Comments

07.04.2026 வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிவக்கூடும். இடியுடன் கூடிய மழை […]

qr code guide | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

QR அறிமுகமாகும் விதம் குறித்து ஜனாதிபதி விளக்கம்..!

  • Apr 6, 2026 - 12:39 PM
  • 0 Comments

சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் நிலவும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமானால், ஒரு நாடாக நாம் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்குள் நுழைய வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்த பொருளாதாரமாக […]

kothu fried rice | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொத்து, ப்ரைட் ரைஸ் பிரியர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி..!

  • Apr 6, 2026 - 11:22 AM
  • 0 Comments

இன்று (06.04.2026) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலைகள் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்‌ஷன் தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் விலை குறைவடைந்தமையினால் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

laufs litro | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோஎரிவாயுவின் புதிய விலைகள்..!

  • Apr 6, 2026 - 11:17 AM
  • 0 Comments

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச சந்தையில் எல்பி வாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் தமது விலை திருத்தத்தை நேற்றிரவு (05.04.2026)அறிவித்தன. அதன்படி நேற்று நள்ளிரவு (05) முதல் எரிவாயு விலைத்திருத்தம் அமுலுக்கு வரும் வகையில்அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊