உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோஎரிவாயுவின் புதிய விலைகள்..!

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச சந்தையில் எல்பி வாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் தமது விலை திருத்தத்தை நேற்றிரவு (05.04.2026)அறிவித்தன.
அதன்படி நேற்று நள்ளிரவு (05) முதல் எரிவாயு விலைத்திருத்தம் அமுலுக்கு வரும் வகையில்அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதன் புதிய விலை,1910 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்கள புதுவருடம் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இயலுமானவரை குறைந்தபட்ச விலை அதிகரிப்பை மேற்கொண்டதாக லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு கொள்கலனுக்கான விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 1070 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் 5700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் 418 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் 2280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்