sisu seriya service launched in chavakachcheri | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரியில் சிசுசெரிய சேவை ஆரம்பிப்பு..!

  • Sep 24, 2026 - 10:59 AM
  • 0 Comments

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரி சபையினர் இணைந்து சிசுசெரிய சேவையை ஆரம்பித்துள்ளனர் யாழ்ப்பாணம் , தென்மராட்சி பகுதிக்கான பாடசாலை சேவையான சிசுசெரிய சேவை இன்றைய தினம் வியாழக்கிழமை(24.09.2026) நுணாவில் சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த பேருந்து சேவையானது, நுணாவில், மட்டுவில் தெற்கு , மட்டுவில் மத்தி, நுணாவில் சந்தி என பயணித்து, சாவகச்சேரி மகளிர் கல்லூரி , சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி , சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்து […]

thileepans sacrifice day 10 marked | Pathivu News உள்ளூர் ஈழம் புதியவை முக்கிய செய்திகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 10ம் நாள்..!

  • Sep 24, 2026 - 10:53 AM
  • 0 Comments

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் 10ஆம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது அதன் போது மாவீரர் சந்தியாவின் தாயார் சின்னையா றீற்றம்மா ஈகை சுடரினை ஏற்றியதை தொடர்ந்து , தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  

jafna interfaith council appeals for mercy for anojan | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அனோஜனுக்கு கருணை காட்டுங்கள்..! யாழ் மாவட்ட சர்வமத பேரவை கோரிக்கை.

  • Sep 24, 2026 - 10:42 AM
  • 0 Comments

சவூதி அரேபிய நீதித்துறையின் கட்டமைப்பை மதிக்கிறோம். அதேவேளை அனோஜனை மன்னித்து, அவரும் அவர் போன்றவர்களும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கோருகிறோம் என யாழ் மாவட்ட சர்வமத பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற போதே சர்வமத தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தெரிவிக்கையில், கல்முனை நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்கும்படி […]

sumanthiran urges avoid provocative posts against muslims | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் பதிவுகளை தவிருங்கள்..! சுமந்திரன் கோரிக்கை

  • Sep 24, 2026 - 10:39 AM
  • 0 Comments

அனோஜனின் விடுதலைக்காக , இன, மத பேதமில்லாமல் அனைத்து சமூகங்களைச் சார்ந்த தலைவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் நோக்கத்தோடும் பொது வெளியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதும் என தமிழரசு கட்சியின் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சவுதி அரபு இராச்சியத்தில் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிற மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான பல […]

urgent warning heavy flooding at ella waterfall | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அவசர எச்சரிக்கை எல்ல நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு..!

  • Sep 24, 2026 - 10:24 AM
  • 0 Comments

மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து திடீரென அதிகரித்து, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சியில் இருந்து சீறிப்பாயும் வெள்ளநீர் அருகிலுள்ள பிரதான வீதியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வருவதால், அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

sajith led sjb protests 22nd amendment today | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டம்..!

  • Sep 24, 2026 - 10:14 AM
  • 0 Comments

“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” எனும் கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் இன்று (24.09.2026) முற்பகல் நடைபெறவுள்ளது. பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் முற்பகல் 09.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வாதிகாரப் பயணத்திற்கு வித்திடும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் நடத்தப்படுவதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் […]

colombo housing complex fire kills one 20 gas cylinders recovered | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி..! வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு.

  • Sep 24, 2026 - 10:08 AM
  • 0 Comments

கொழும்பில் மொரட்டுவை சோய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சி பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் மொரட்டுவை மாநகர சபைகளுக்குச் சொந்தமான 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் குறித்த வீட்டின் உரிமையாளரான 84 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட மூவரும் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 15 வயதுடைய […]

national week declared for world childrens day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்..!

  • Sep 24, 2026 - 09:34 AM
  • 0 Comments

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தேசிய வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை முதல் (25.09.2026) முதல் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், “மனதில் வலிமை – சிறுவர்களின் வளம்” எனும் கருப்பொருளின் கீழ் இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

king nilwala rivers flood warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிங், நில்வலா கங்கைகளை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!.

  • Sep 24, 2026 - 09:32 AM
  • 0 Comments

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (24.09.2026) அதிகாலை 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நாளை (25.09.2026) அதிகாலை 2.30 மணி வரை செல்லுபடியாகும். தற்போது கிங் கங்கை படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவில் பலத்த மழை பெய்துள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இம்மழை நிலைமை மற்றும் […]

heavy rain expected in several parts of sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

  • Sep 24, 2026 - 09:29 AM
  • 0 Comments

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடந்து வருகின்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லை என்றபோதிலும், அமைப்பை நோக்கி வீசும் காற்று ஓட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழை நிலைமை மேலும் தொடரும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊