கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில் இன்று (03.08.2026) எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள், குளக்கரைக்கு அருகே சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் இது தற்கொலையா அல்லது எவரேனும் கொலை செய்து உடலைத் தீயிட்டு கொளுத்திச் சென்றனரா என்ற கோணங்களில் கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு சான்றுகள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், நீதிமன்ற உத்தரவைப் பெற்று சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூ.லின்ரன்
வடமராட்சி, பச்சிளைப்பள்ளி நிருபர்
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1404208991619455
What’s your Reaction?

