sainthamaruthu council status | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்ட ரீதியானது..!

  • May 7, 2026 - 12:16 PM
  • 0 Comments

கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது நகர சபைக்கும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் 2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் -உயர் நீதிமன்றம் தீர்ப்பு- கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று தீர்ப்பின் அடிப்படையில் இவ்வாறு […]

kalu ganga bridge accident | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

களு கங்கை பாலத்தில் கோர விபத்து மயிரிழையில் தப்பிய உயிர்கள்..!

  • May 7, 2026 - 11:28 AM
  • 0 Comments

கட்டுநாயக்காவில் இருந்து கஹவத்தை நோக்கி பயணித்த சிற்றூர்தி ஒன்று இன்று அதிகாலை(07.06.2026) இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் மோதியதில் அதில் பயணித்த 9 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். விபத்து நேரத்தில் வாகனம் களு கங்கையில் விழுந்திருக்குமானால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், இது தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

thirumavalavan cm speculation | Pathivu News உலகம் புதியவை முக்கிய செய்திகள்

திமுக, அதிமுக திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி ; தமிழகத்தில் பரபரப்பு..!

  • May 7, 2026 - 11:16 AM
  • 0 Comments

தமிழக முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டண இழுபறியால் அது கைகூடாமல் போயுள்ளமை விஜய் ஆதர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திராவிட கட்சிகள் திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வியத்தகு அதிர்வுகளை உருவாக்கி உள்ளன். திராவிடகட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபம் இது […]

police media announcement | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொலிஸ் ஊடக பிரிவின் முக்கிய அறிவிப்பு..!

  • May 7, 2026 - 10:56 AM
  • 0 Comments

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இடம்பெறும் மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக, சொத்தின் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம் என பொலிஸ் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு கீழே,    

kurunegala member resigns | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பதவி விலகல்..!

  • May 7, 2026 - 10:25 AM
  • 0 Comments

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06.05.2026) தன்னிடம் கையளித்ததாக குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து குறிப்பிட்டுள்ளார். மாநகர சபைக்குள் நிலவும் முறையற்ற நிர்வாகம், மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயங்களைக் குறைக்க முடியாமையினால் தாம் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கோட தொகுதியில் அதிக […]

financial fraud arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழு கைது..!

  • May 7, 2026 - 10:18 AM
  • 0 Comments

விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 41 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும் 33 பெண் சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (06.05.2026) மாலை கொள்ளுப்பிட்டி, உத்தரானந்த மாவத்தை பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் எனவும், […]

sl weather today 9 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 7, 2026 - 09:57 AM
  • 0 Comments

07.05.2026 இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் […]

vithiya case | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வித்தியா:கொலையாளிகளிற்கு விடுதலையில்லை..!

  • May 7, 2026 - 09:49 AM
  • 0 Comments

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை வழக்கில், குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இன்று புதன்கிழமை அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. ‘சுவிஸ் குமார்’ என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட நான்கு பிரதான குற்றவாளிகளுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.யாழ்ப்பாணம் சுற்றுலா தண்டனைக்கு எதிராகக் குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் குழாம் நிராகரித்தது. வழக்கில் தொடர்புடைய ஏனைய இரண்டு குற்றவாளிகளின் […]

ravikaran justice call | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பன்னாடுகளிடம் தமிழினப்படுகொலைக்கான நீதியைக் கோரியுள்ள ரவிகரன் எம்பி..!

  • May 7, 2026 - 09:38 AM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் தமிழ் படுகொலை இடம்பெற்று 17ஆண்டுகள் ஆகியுள்ளபோதும், இதுவரை நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பன்னாடுகளிடம் தமிழினப்படுகொலைக்கான நீதியைக் கோரியுள்ளார். அதேளை இறுதிக்கட்ட போர்க்காலப்பகுதியில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டநிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவேண்டுமெனவும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.Politics நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தின் […]

vijay victory congrats | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

விஜய்யின் வெற்றி ஈழத் தமிழர்கள் சார்பாக கஜேந்திரகுமார் வாழ்த்து..!

  • May 6, 2026 - 11:56 AM
  • 0 Comments

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜே. விஜய் அவர்களுக்கு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள விஜய்க்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கிலும் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் ஈழ மக்களின் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊