உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பதவி விலகல்..!

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06.05.2026) தன்னிடம் கையளித்ததாக குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து குறிப்பிட்டுள்ளார்.

மாநகர சபைக்குள் நிலவும் முறையற்ற நிர்வாகம், மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயங்களைக் குறைக்க முடியாமையினால் தாம் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கோட தொகுதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று இவர் மாநகர சபைக்குத் தெரிவாகியிருந்தார்.

அங்கீகரிக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டுமானங்கள், முறையற்ற எரிபொருள் பயன்பாடு, முறையற்ற மேலதிக நேர கொடுப்பனவுகள், சேவைக்கு வருகை தந்துவிட்டு இடையில் வெளியேறுதல், நகரை சுத்தமாக பராமரிக்க முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தான் பதவி விலகுவதாக பிரேமச்சந்திர தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை