புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

களு கங்கை பாலத்தில் கோர விபத்து மயிரிழையில் தப்பிய உயிர்கள்..!

கட்டுநாயக்காவில் இருந்து கஹவத்தை நோக்கி பயணித்த சிற்றூர்தி ஒன்று இன்று அதிகாலை(07.06.2026) இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் விபத்துக்குள்ளானது.

பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் மோதியதில் அதில் பயணித்த 9 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து நேரத்தில் வாகனம் களு கங்கையில் விழுந்திருக்குமானால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், இது தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை