paruthithurai fish market meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்..!

  • May 8, 2026 - 01:51 PM
  • 0 Comments

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (08.05.2026)காலை 10:30 மணியளவில் பருத்தித்துறை நகர சபையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மீன் சந்தை வியாபாரிகள் சார்பில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்று தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். கலந்துரையாடலின் போது, வியாபாரிகள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் […]

thera arrest rajangane | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது..!

  • May 8, 2026 - 01:19 PM
  • 0 Comments

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் விரிவான […]

drug network raid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சுத்தாவின் போதைப்பொருள் வலையமைப்பு சுற்றிவளைப்பு..!

  • May 8, 2026 - 12:51 PM
  • 0 Comments

பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘டுபாய் சுத்தா’ என்பவரின் போதைப்பொருள் வர்த்தகத்தில், பண்டாரகம பகுதிக்கான பிரதான விநியோகஸ்தர் உட்பட 7 சந்தேக நபர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் பொதி செய்யப்படும் இடமொன்றை சுற்றிவளைத்த போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 50 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருட்களை பொதி செய்ய பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள், பொலித்தீன் […]

anti drug order | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு..!

  • May 8, 2026 - 12:40 PM
  • 0 Comments

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபை நேற்று (07.05.2026) முற்பகல் ஜனாதிபதி […]

paruthithurai waste management meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பருத்தித்துறை நகரசபையில் இடம்பெற்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த கூட்டம்..!

  • May 8, 2026 - 12:00 PM
  • 0 Comments

திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட சபைக் கூட்டம் நகரசபையில் இன்று(08.05.2026) நடைபெற்றது பருத்தித்துறை நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் திண்மக்கழிவுப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளைக் காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சபைக் கூட்டம் இன்று காலை நகரசபை மண்டபத்தில் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டத்தில், நகரசபைப் பிரதிநிதிகள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் […]

kathirkamam yatra | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

சித்தர்களின் கதிர்காம வேல்யாத்திரை ஆடி 10 இல் ஆரம்பம்..!

  • May 8, 2026 - 11:43 AM
  • 0 Comments

சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ விபரிப்பு சித்தர்களின் குரல் கதிர்காம கானக வேல் யாத்திரை எதிர்வரும் ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இக் கதிர்காமத்திற்கான கானக வேல் யாத்திரை ஜூலை 15ம் திகதி புதன்கிழமை கதிர்காமத்தை சென்றடையும் என்பதையும் அதிகார பூர்வமாக அறிவித்தார். அதற்கு முன்னதாக, பாரம்பரிய முறைப்படி குறித்த வேல் யாத்திரை […]

vietnam president visit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதிக்கு வரவேற்பு..!

  • May 8, 2026 - 10:38 AM
  • 0 Comments

08.05.2026 வியட்நாம் ஜனாதிபதி ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/969242752179348

chandrasena death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கபில சந்திரசேன தற்கொலை..!

  • May 8, 2026 - 10:24 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் […]

biryani price rise | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பிரியாணி விலை அதிகரிப்பு..!

  • May 7, 2026 - 12:39 PM
  • 0 Comments

இன்று (07.05.2026) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இது குறித்துத் தெரிவிக்கையில், சுமார் 25% – 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும், தற்போதுள்ள நிலையில் அவர்களால் அந்த […]

vakarai fish farming project | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம்..!

  • May 7, 2026 - 12:32 PM
  • 0 Comments

மட்டக்களப்பு வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின் மீன்மதி செயற்திட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பின் தொழில்நுட்ப நிபுணர் குணநேசராஜா பிரதீஷ் தெரிவித்தார். வாகரையில் உள்ள கிரிமிச்சைக் குளத்தில் ஒரு தொகுதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு அங்குள்ள உள்ளுர் மீனவ சங்கங்கள், பயனாளிகளான பெண்கள் உட்பட கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. நிலைபேறான, காலநிலைக்கு இசைவான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மூலம் பிரதேச […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊