விளையாட்டு

அறிமுக போட்டியில் ஹர்ஸித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை

  • Feb 7, 2025 - 07:06 AM
  • 0 Comments

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது இப்போட்டிக்கான இந்திய அணியில் யஸ்ஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஸஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகினர். முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் ஜோடி அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன் பார்ட்னரச்ஷிப் அமைத்தது. இறுதியில், இங்கிலாந்து அணி 248 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது. இந்தப் […]

உலகம் செய்திகள்

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம்- டொனால்டு டிரம்ப்

  • Feb 4, 2025 - 07:02 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணை இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. […]

உலகம் செய்திகள்

சிரியாவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி

  • Feb 4, 2025 - 06:48 AM
  • 0 Comments

சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது. இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் சிரிய சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 15 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் […]

செய்திகள்

தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • Feb 3, 2025 - 07:41 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவாகளிடமிருந்து விசைப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

அமெரிக்கர்களின் வருமான வரியை ரத்து செய்ய டிரம்ப் திட்டமிட்டுள்ளார்

  • Jan 29, 2025 - 08:01 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கான வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வருமான வரிக்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த போவதாகவும் இதன் மூலம் அமெரிக்க மக்களைப் பணக்காரர்களாக ஆக்க முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக […]

உலகம்

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

  • Jan 27, 2025 - 10:43 AM
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்’ என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் […]

விளையாட்டு

திலக் வர்மாவின் நிதானமான ஆனால் வேகமான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது

  • Jan 26, 2025 - 08:48 AM
  • 0 Comments

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது. நூணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் பட்லர் அதிரடியாக விளையாடி 45 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்தார் இறுதி கட்டத்தில் பிரைடன் கார்ஸ் அதிரடியாக ஆடி 17 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி […]

இந்தியா

தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது

  • Jan 26, 2025 - 07:45 AM
  • 0 Comments

குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து […]

உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை இஸ்ரேல் போட்டுதள்ளியது?

  • Jan 23, 2025 - 08:27 AM
  • 0 Comments

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி; சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஸேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து […]

செய்திகள்

யாழ் பருத்தித்துறை கடலில் கடற்படையினர் 2 நாள் பயிற்சி மீன்பிடிக்க தடை

  • Jan 21, 2025 - 03:25 PM
  • 0 Comments

வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படையினர் சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.