விளையாட்டு

திலக் வர்மாவின் நிதானமான ஆனால் வேகமான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது.

நூணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.

அணித்தலைவர் பட்லர் அதிரடியாக விளையாடி 45 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்தார்

இறுதி கட்டத்தில் பிரைடன் கார்ஸ் அதிரடியாக ஆடி 17 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இதனால் 78 ஓட்டங்கள் பெற்றிருந்த போது இந்திய 5 விக்கெடடுகளை ; இழந்தது
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் திலக் வர்மா அதிரடியாக ஆடின் அரை சதம் கடந்தார்.

6வது விக்கெட்டுக்கு திலக் வர்மா-வாஸிங்டன் சுந்தர் ஜோடி 38 ஓட்டங்கள்; சேர்த்த நிலையில் வாஸிங்டன் சுந்தர் 26 ஓட்டங்கள்pல் ஆட்டமிழந்தார்

இறுதியில், இந்தியா 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திலக் வர்மா 72 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்;.

இதன்மூலம் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய