auditor | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை; அமைச்சர் வசந்தவின் நிலைப்பாடு..!

  • Apr 21, 2026 - 10:00 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலுள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (20) இரவு டி.வி. தெரணவின் ‘360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் மோசடி நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், ஏற்படக்கூடிய சாத்தியமான நிலமைகள் குறித்து மட்டுமே அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த […]

financial assistant appointment | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நிதி உதவியாளராக சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ் எம் எப் அமான் நியமனம்..!

  • Apr 21, 2026 - 09:42 AM
  • 0 Comments

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதி உதவியாளராக மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் திருமதி எஸ். எம். எப். அமான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம் எஸ் ஸஹதுல் நஜீம் நேற்றைய தினம் (20.04.2026) வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கல்முனை வலய கல்வி அலுவலக கணக்காளர் ரீ .லிங்கேஸ்வரனும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருமதி எஸ் .எம். எப். […]

land encroachment protest vadamarachchi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரச காணி அபகரிப்பு -வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதிப் போராட்டம்.

  • Apr 20, 2026 - 01:15 PM
  • 0 Comments

அரச காணி அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதிப் போராட்டம் ஜே/420 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, அரச காணி அபகரிப்புக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்தும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குடத்தனை வடக்கு மக்கள் காணி அபகரிப்பு மற்றும் துனை போகும் அரச […]

jaffna secretariat | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்டச் செயலக கணக்காளராக திரு. வ. ரதீஸ் கடமையேற்பு..!

  • Apr 20, 2026 - 12:28 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் கணக்காளராக திரு. வல்லவராஜன் ரதீஸ் இன்றைய தினம் (20.04.2026) காலை 09.00 மணியளவில் அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமையேற்பதற்கு முன்னராக சம்பிரதாயபூர்வமாக கணக்காளர் வரவேற்க்கப்பட்டார் என்பதுடன், அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் […]

nuwara eliya visit | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நுவரெலியாவுக்கு விஜயம் செய்த இந்திய துணை ஜனாதிபதி..!

  • Apr 20, 2026 - 12:13 PM
  • 0 Comments

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20.04.2026) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், […]

tamil area incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் வீசப்பட்ட மனித உடல் பாகங்கள் – குழப்பத்தில் மக்கள்..!

  • Apr 20, 2026 - 12:05 PM
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சௌத்பார் பகுதியில் இறந்த சடலங்களில் இருந்து அகற்றப்படும் மனித எச்சங்களை உரிய வகையில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை காரணமாக பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த பகுதியில் இயங்கி வரும் தனியார் மனித உடல் பதப்படுத்தும் நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்த உடல்களில் இருந்து அகற்றப்பட்ட மனித உடற் பாகங்கள் அந்த பகுதியில் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டு பல்வேறு […]

gold silver | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தங்கம் மற்றும் வெள்ளி பிரியர்களுக்கு தங்கமான செய்தி..!

  • Apr 20, 2026 - 11:29 AM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,796 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் 80.21 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றங்களால் தங்கம் விலை பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

annai bhoopathy 38 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 11:12 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(19.04.2026) தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்னை பூபதி அம்மாவின் பேத்தி கலந்து கொண்டு ஈகைச்சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கத்தை செலுத்தினார். தொடர்ந்து , நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

jaffna amma statue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 10:57 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

fuel price rise 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த மசகு எண்ணெயின் விலை..!

  • Apr 20, 2026 - 10:48 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 6.5% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 95.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 90.15 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதே, மசகு எண்ணெய் விலை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊