gold silver | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தங்கம் மற்றும் வெள்ளி பிரியர்களுக்கு தங்கமான செய்தி..!

  • Apr 20, 2026 - 11:29 AM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,796 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் 80.21 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றங்களால் தங்கம் விலை பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

annai bhoopathy 38 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 11:12 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(19.04.2026) தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்னை பூபதி அம்மாவின் பேத்தி கலந்து கொண்டு ஈகைச்சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கத்தை செலுத்தினார். தொடர்ந்து , நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

jaffna amma statue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 10:57 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

fuel price rise 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த மசகு எண்ணெயின் விலை..!

  • Apr 20, 2026 - 10:48 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 6.5% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 95.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 90.15 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதே, மசகு எண்ணெய் விலை […]

kumara power minister | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..!

  • Apr 17, 2026 - 04:59 PM
  • 0 Comments

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இவர்கள் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் […]

chunnakam police | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுண்ணாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது..!

  • Apr 17, 2026 - 04:17 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனி நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு நடத்தப்படவிருந்த கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியைப் பொலிஸார் சாமர்த்தியமாக முறியடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலும் பொலிஸ் முற்றுகையும் நேற்று (16/04/2026) புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகச் சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்து அதிரடிச் சோதனையை முன்னெடுத்தனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் […]

land survey | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து..!

  • Apr 17, 2026 - 03:29 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று (17.04.2026) இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்று அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர் ஆனால் இறுதியில் காணி அளவீடு செய்யப்படவில்லை. காணி அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் ஊடாக நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர், மற்றும் கடல் தொழில் அமைச்சர் அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் கடந்த சில தினங்களில் தீர்மானித்திருந்தனர். […]

road development | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம்

  • Apr 17, 2026 - 02:51 PM
  • 0 Comments

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக சற்று நேரத்திற்கு முன்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தின் போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

vavuniya cross street | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா முதலாம் குறுக்கு தெருவில் உள்ள பொன் வீடியோ தீப்பற்றி எரிந்தது..!

  • Apr 17, 2026 - 09:49 AM
  • 0 Comments

குறித்த அனர்த்தம் நேற்றைய(16.04.2026) தினம் பி.ப இடம்பெற்றது காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1447637486386056

400 crore boat | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

படகில் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்..!

  • Apr 17, 2026 - 09:39 AM
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊