sl weather 18 7 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 17, 2026 - 09:23 AM
  • 0 Comments

17.04.2026 மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில […]

chandrakumar joins | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சந்திரகுமார் அணியுடன் இணைந்து பயணிக்க முடியாது..!

  • Apr 16, 2026 - 10:28 AM
  • 0 Comments

சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளான ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து பயணித்தார்கள். இன்னொரு கட்சி தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து சின்னாபின்னமாக்குவதில் அரசோடு கூடியிருந்தவர்கள். இப்பொழுது தமிழ் […]

rayu football | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமரர் ராயூ உதைபந்தாட்ட நினைவுக் கிண்ணம் ஆரம்பமானது..!

  • Apr 16, 2026 - 10:11 AM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் நடாத்தும் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அமரர் ராயூ நினைவுக் கிண்ண உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது நேற்றைய தினம்(15.04.2026) மாலை 04.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவர் நகுலேஸ்வரன் தலைமையில் வத்திராயன் உதயசூரியன் மைதானத்தில் ஆரம்பமானது. மறைந்த அமரர் ராயூ அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை அவரது தாயார் அணிவித்துவைக்க மலரஞ்சலியை வத்திராயன் கிராம சேவையாளர் ஆரம்பித்துவைத்தார் அதன்பின்பு விளையாட்டுக் கழக தலைவர்கள்,லீக் உறுப்பினர்கள்,விளையாட்டு […]

economic recovery | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம்..!

  • Apr 16, 2026 - 09:26 AM
  • 0 Comments

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ் தெரிவித்துள்ளார். இலக்கியா-தென்றல் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜெயச்சித்திரா அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பானது […]

goat herding | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முகமாலையில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு..!

  • Apr 15, 2026 - 04:15 PM
  • 0 Comments

பளை பொலிஸார் விசாரணை கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (15.04.2026) ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த விபரங்கள்: முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை வழமை போல ஆடு மேய்ப்பதற்காகச் சென்ற முதியவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. அடையாளம் காணப்பட்டவர்: […]

education college tamil style | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி வெளியானது..!

  • Apr 13, 2026 - 04:41 PM
  • 0 Comments

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். நேர்முகத் தேர்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் […]

historic site 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய பங்குனித்திங்கள்..!

  • Apr 13, 2026 - 04:35 PM
  • 0 Comments

5ஆம் திங்கள் 13.04.2026 காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1644972563108282

cid vs government | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக CIDயில் முறைப்பாடு..!

  • Apr 13, 2026 - 04:14 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர். நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, இந்த முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து பாராளுமன்ற […]

chemmani grave 6 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக 2 கோடி ரூபா நிதி..!

  • Apr 13, 2026 - 10:26 AM
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அல்லது எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் அந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. எனினும், அகழ்வுப் […]

tamil youth | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் இளைஞர் அடித்துக்கொலை..!

  • Apr 13, 2026 - 10:22 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (12.04.2026) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்ப தகறாரு காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊